வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size
பதாகை

கிண்­ணியா குறிஞ்­சாக்­கேணி பாலத்தின் புன­ர­மைப்பு பணிகள் மந்­த­க­தி­களில் மக்கள் விசனம்

888888

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிண்­ணியா குறிஞ்­சாக்­கேணிப் பாலத்தின் புன­ர­மைப்புப் பணிகள் மந்த கதியில் இடம்­பெ­று­வ­தனால் தாம் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­நோக்கி வரு­வ­தாக மக்கள் தெரி­விக்­கின்­றனர்.அண்­மையில் ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்குக் கார­ண­மாக முற்­றாகச் சேத­ம­டைந்த பாலத்தை புன­ர­மைப்புச் செய்­வ­தாக பல அர­சி­யல்­வா­திகள் முன் வந்த போதிலும் அதன் புன­ர­மைப்புப் பணிகள் சீராக இடம்­பெ­ற­வில்லை என மக்கள் குற்றம் சாட்­டு­கின்­றனர்.

கிண்­ணியா நகர சபை­யையும் கிண்­ணியா பிர­தேச சபை­யையும் இணைக்கும் முக்­கி­ய­மான இப்­பா­லத்தின் ஊடாக நாளொன்­றுக்கு சுமார் ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட பிர­யா­ணி­களும் நூற்­றுக்கு மேற்­பட்ட வாக­னங்­களும் பயணம் செய்­தன. எனினும் இப்­பாலம் துரி­த­க­தியில் புன­ர­மைக்­கப்­ப­டா­த­தனால் சிர­மங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.சுமார் நான்­கிற்கும் மேற்­பட்ட மகா வித்­தி­யா­ல­யங்­க­ளையும் பத்­துக்கும் மேற்­பட்ட பாட­சா­லை­க­ளையும் உள்­ள­டக்­கிய குறிஞ்­சாக்­கேணி பகு­தியில் கல்வி கற்கும் மாண­வர்கள் ஆசி­ரி­யர்கள் தொழி­லா­ளர்கள் என பலரும் பயன்­ப­டுத்தும் இப்­பாலம் புன­ர­மைக்­கப்­பட்டு மக்­களின் போக்­கு­வ­ரத்­துக்கு உதவி புரிய வேண்டும். இதற்கு அதி­கா­ரிகள் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

இப்­பா­லத்­தி­னூ­டான போக்­கு­வ­ரத்து தடைப்­பட்­டுள்­ள­தனால் மக்கள் இக்­க­ரை­யி­லி­ருந்து அக்­க­ரைக்குச் செல்ல தோணி­க­ளுக்கு பணம் செலுத்­தியே செல்ல வேண்டி இருந்தமையினால் மக்களாகவே மண்மூட்டைகளால் ஒரு நடை பாதையை உருவாகியுள்ளார்கள். எனினும் இதனூடாக பாடசாலை மாணவர்கள், சிறார்கள் பாதுகாப்பற்ற நிலையிலேயே போக்குவரத்து செய்கின்றனர். 

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

மக்கள் குரல்

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17965
மொத்த பார்வைகள்...2074889

Currently are 234 guests online


Kinniya.NET