வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size
பதாகை

கிண்ணியா மணியரசன் குளம் புனரமைப்பு செய்யப்படாமை குறித்து மக்கள் விசனம்

DSC03362

கிண்ணியா வானாறு மணியரச  கிராம மக்களுக்கு சகல வேலைக்கும் பயன் தரக்கூடிய மணியரசன்  குளம் இதுவரை புனரமைப்பு செய்யப்படாமையால் அப்பகுதி மக்கள் தொழில் முயற்சிகளை முறையாக மேற்கொள்ள முடியாதிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்குளத்தை புனரமைப்பதன் மூலம் அப்பகுதியில் உள்ள 200 ஏக்கர் நிலப்பரப்புக்களில் மேற்கொள்ளப்படும் நெற்பயிர் செய்கைக்கான நீரைப் பெற்றுக்கொள்ள முடியும். இதனால் மணியரச குளத்தை அண்மித்த  மூன்று கிராம விவசாய மக்களும் பயனடைவார்கள் .மற்றும் இரண்டு போகம் விவசாயம் செய்யமுடியும். 

இந்தக் குளம் புனரமைக்கப்படுவதன் மூலம் பெரும்போகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் குறிப்பிட்ட சில ஏக்கர் வயல்களுக்கு நீர்ப்பாசனம் கிடைப்பதோடு தோட்டப் பயிர் செய்கையும், கோடை வறட்சியின்போது குளத்தை அண்டிய கிணறுகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும் உதவும் என இப் பிரிவு விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

(கிண்ணியா நெட்)

DSC03372

DSC03355

DSC03361

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

மக்கள் குரல்

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17966
மொத்த பார்வைகள்...2074890

Currently are 223 guests online


Kinniya.NET