வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size
பதாகை

கிண்ணியா அல்-முஜாகிதா வித்தியாலயத்தின் அவல நிலை..!

al-mujahida04

அண்மையில் வீசிய கடும் காற்றின் காரணமாக கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட முனைச்சேனை அல்-முஜாகிதா வித்தியாலயத்தில் அமைந்துள்ள தற்காலிக தகரக் கொட்டில்கள் சேதமடைந்து வகுப்பறைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இன்னுமொறு தகரக் கொட்டிலின் தகரங்கள் வீசி எறியப்பட்டுள்ளன. இக் கொட்டில்களில் தரம் 6, 7, 10, 11 ஆகியவகுப்புக்களின் கற்றல் செயற்பாடுகள் நடைபெறுகின்றன. அத்துடன் 50 வருடங்கள் பழைமைவாய்ந்த கட்டடம் ஒன்று என்னேரமும் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் காணப்படுகின்றன. இக்கட்டத்திலும் வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தவணை விடுமுறை காலமாதலால் இச்சேதத்தின் மூலம் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத போதிலும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04 ம் திகதி பாடசாலை ஆரம்பிக்கும் போது மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் இச்சேதத்தின் மூலம் பாதிப்படையக் கூடிய நிலை காணப்படுகின்றன.

இப்பாடசாலையைப் பொருத்தவரை மரநிழல்களில் வைத்து மாணவர்களுக்கு கற்பிப்பதறகு மரநிழல்கள் கூட இல்லை.

எனவே, இதனை உடன் திருத்தி மாணவர்களுக்கான கற்றல் சுழலை ஏற்படுத்தித் தருவதுடன் இம்மாணவர்களின் நீண்டகால எதிர்பார்ப்பான புதிய நிரந்தரக் கட்டமொன்றினை அமைக்க ஆவனசெய்யுமாறும் மாணவர்கள் மற்றும் சமூகம் உரிய அதிகாரிகளை அன்புடன் கேட்டுக் கொள்கின்றனர்.

al-mujahida01

al-mujahida02

al-mujahida03

al-mujahida05

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

மக்கள் குரல்

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17971
மொத்த பார்வைகள்...2074895

Currently are 231 guests online


Kinniya.NET