வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size
பதாகை

புல்மோட்டை சன சமூக நிலையத்தின் இன்றைய அவலநிலை!

pul1

-டீன் பைரூஸ்-

 

புல்மோட்டை: புல்மோட்டை ஜின்னா நகர் பிரதான வீதியில் சமூக பயன்பாட்டிலிருந்து வந்த 'ஜின்னா நகர் சன சமூக நிலையம்' இன்று கைவிடப்பட்ட நிலையில் கவனிப்பாரின்றி மாதங்கள் பல செல்கின்ற நிலையில் மிருக-ஊர்வனங்களின் தங்குமிடமாக அது மாறி இருப்பதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் என பல தரப்பினராலும் மிகவும் பிரயோசனமாக பயன்படுத்தி வந்த இச்சனசமூக நிலையம் இன்று இவ்வாறு இருப்பதற்கு யார் காரணம்...?

மேலும் அப்பிரதேச எல்லைக்குல் ஆளும் தரப்பு ஆட்சி அதிகாரங்களில் உள்ளவர்கள், பல நிற கட்சிகளின்; அரசியல் பிரமுகர்கள், சமூக அமைப்புகள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள். பொது மற்றும் தவ்வா அமைப்புகள் என ஏராளமான அமைப்பகள் இருந்தும் பலன் ஏதுமில்லை எனவும் பலரும் கவலை தெரிவித்தனர்.

ஊடகம் என்பது சக்தி மிக்கது அதனாலயே இப்பிரச்சினையினை ஊடகங்கள் மூலம் தெரிவிப்பதன் மூலம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு ஊடகத்தினை நாடியதாக சமூக நலன் விரும்பிகள் பலர் தெரிவித்தனர்.

சமூகப் பயன்பாட்டுக்காக இவ்வாறான சன சமூக நிலையங்களை உருவாக்குவது, பாதுகாத்து, பாரமரிப்பது என்பதெல்லாம் இஸ்லாத்தின் பார்வையில் 'சதகதுல் ஜாரியா' ஆகும்.

எனவே எதிர்வரும் நோன்புப் பொருநாள் காலத்திற்கு முன்னராவது இச் சன சமூக நிலையத்தினை மீள் புணர்நிர்மானம் செய்து கொடுக்க சம்மந்தப்பட்டவர்கள் முன்வருவார்களா... என பலரும் எதிர் பார்கின்றனர்.

தீர்வு பெற்றுக் கொடுப்பது யார்...........?

pul

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

மக்கள் குரல்

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18442
மொத்த பார்வைகள்...2075366

Currently are 345 guests online


Kinniya.NET