வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size
பதாகை

கிறிஸ் மனிதனால் கால் இழந்த கிண்ணியா முகம்மட் சப்ராஸ்க்கு உதவுங்கள்!

111

"ஊருக்காக தன் காலை கொடுத்தவனுக்கு நீங்கள் எதைக் கொடுக்கப்போகிறீர்கள்??"

2011 ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஞாயிறு இரவு 8 மணியளவில் வீடொன்றின் சமையலறைக்குள்ளிருந்த பெண்ணை முக மூடி அணிந்த ஒருவர் யன்னல் ஊடாக கூப்பிட்டுள்ளார். அவரைக் கண்ட அப்பெண் அவலக் குரல் எழுப்பவே அயலவர்கள் அங்கு வர முக மூடிய கிறிஸ் மனிதன் தப்யோடிவிட்டார். அவரைத் தேடியபோதும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இதே நேரம் இரவு 11 மணியளவில் பைசல் நகரில் வீடொன்றில் தனிமையிலிருந்து பெண்ணை ஒருவர் யன்னல் ஊடாகக் கத்தியைக் காட்டி மிரட்டவே அப்பெண்ணும் அவலக் குரல் எழுப்பியுள்ளார். அந்தச் சத்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு வரவே கிறிஸ் மனிதன் தப்பியோடியுள்ளார்.

எனினும் அவரை இளஞர்கள் உட்பட பலரும் துரத்திச் செல்லவே தப்பி சென்று கிண்ணியா பழைய வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள கடற்படை முகாமினுள் நுழைந்ததை அப்பிரதேச மக்கள் கண்டுள்ளனர் . இதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பிரதேச மக்கள் ஒன்று திரண்டு கடற்படை முகாம் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தார்கள் மறைந்திருக்கும் மர்ம மனிதர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இதன் காரணமாக முகாமில் இருந்து கடற்படையினார் இளஞர்களைப் பார்த்து துப்பாக்கியால் வெடிவைத்தார்கள் அப்போது இரு 16 வயது இளஞர்ளை துப்பாக்கி ரவைகள் தாக்கியது அதில் ஒருவர் தற்போது குணமாகிவிட்டார். இரண்டவது 16 வயதான இக்பால் முகம்மட் சப்ராஸ் என்ற இளஞர் எழுந்து நடக்க முடியாத நிலையில் தற்போது காணப்படுகின்றார்.

இக்பால் முகம்மட் சப்ராஸ் கடந்த இரண்டு வருடங்காளக தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். மற்றும் இதுவரை சப்ராஸ்க்கு வைத்தியச் செலவாக 26,00,000/- (இருபத்தி ஆறு லட்சம்) ரூபாய் செலவிடப்பட்ட நிலையில் தற்போது சப்ராஸின் வைத்தியச் செலவுக்கு அவரது குடும்பம் பெரும் கஷ்டத்தினை எதிர் நோக்குகின்றார்கள்..

முகம்மட் சப்ராஸ் எழுந்து நடப்பதற்கு இரண்டு செயற்கை கால் பொருத்தவும், காலில் உடைந்த பகுதிகளை நிமிரத்த உடற்பயிற்சி கருவிகள் வாங்குவதற்கும், ஏனைய வைத்திய சொலவுகளுக்கும் முகம்மட் சப்ராஸ்க்கு தற்போது 300,000 (மூன்று லட்சம் ரூபாய ); தேவைப்படுகின்றது.

தனவந்தர்கள் .செல்வந்தர்கள். உதவி செய்ய நினைப்பவர்கள் கிறிஸ் மனிதன் பிரச்சினையில் எமது சமூகத்திற்காக குரல் கொடுத்து காலினை இழந்த தற்போது பதினொட்டு வயதான முகம்மட் சப்ராஸ் எனும்; இளஞன் எழுந்து நடக்க வேண்டும் என துஆ செய்து உங்கள் நன்கொடைகள் மூலம் உதவுங்கள்.

11

1111

 

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

மக்கள் குரல்

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18444
மொத்த பார்வைகள்...2075368

Currently are 277 guests online


Kinniya.NET