வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size
பதாகை

கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பாரதிபுரம் இந்து மயான வீதியின் அவலநிலை!!

AAlankerny01

திருகோணமலை கிண்ணியா நகர சபைக்குட்பட்ட ஆலேங்கேணி ஈச்சந்தீவு ஊடாக பாரதிபுரம் இந்து மயானத்திற்குச்செல்லும் வீதி இரு பக்கங்களும் ஆற்று நீரினால் மூழ்கியுள்ளதால் அவ்வழியின் ஊடாக பிரேதங்களை எடுத்துச்செல்வதில் மிகவும் அசௌகங்கரியங்களை எதிர்நோக்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆலேங்கேணி கிராம சேவையாளர் பிரிவில் 480 குடும்பங்களும், ஈச்சந்தீவு கிராம சேவையாளர் பிரிவில் 280 குடும்பங்களும் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.கிண்ணியா நகர சபைக்குட்பட்ட இந்து மயானம் இது என்பதால் இப்பகுதியிலுள்ள இந்து மக்கள் இம்மயானத்தையே பயன்படுத்த வேண்டியுள்ளது.

தேர்தல்காலங்களில் பல அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தாங்கள் வெற்றி பெற்றால் பல அபிவிருத்தி திட்டங்களை செய்வோம். இன,மதம் பாகு பாடு காட்டமாட்டோம்.அனைவரும் ஒரே சகோதரத்துவத்துடன் வாழ்வோம்.நீங்கள் எமக்கு வாக்களியுங்கள் என்று கூறியவர்கள் இன்று அரசியல் கதிரைகளில் உயர் அதிகாரங்களில் இருக்கின்றனர். இருந்தும் குறைபாடுகள் குறித்து கவனிக்க வில்லை;

எனவே இது குறித்து நகர சபை கூடிய கவனம் எடுக்க வேண்டுமென ஆலங்கேணி,ஈச்சந்தீவு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

(அப்துல்சலாம் யாசீம்,பன்குளம்)

AAlankerny02

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

மக்கள் குரல்

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18442
மொத்த பார்வைகள்...2075366

Currently are 355 guests online


Kinniya.NET