வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

வரலாற்றின் முதலாவது 4 நாள் டெஸ்ட்

11

வரலாற்றின் முதலாவது நான்கு நாள் டெஸ்ட் போட்டி, போர்ட் எலிஸபெத்தில் இலங்கை நேரப்படி இன்று மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தென்னாபிரிக்க, சிம்பாப்வே அணிகளுக்கிடையே பகல் – இரவுப் போட்டியாக நடைபெறவுள்ள இந்த டெஸ்டில் ஒவ்வொரு நாளிலும் 98 ஓவர்கள் வீசப்படவுள்ளன.

இப்போட்டியில், தென்னாபிரிக்காவின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிக்கு ஏ.பி டி வில்லியர்ஸ் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், குழாமில்

டேல் ஸ்டெய்ன் இடம்பெற்றுள்ளபோதும் அணியில் இடம்பெறுவாரா என்பது சந்தேகமாகவேயுள்ளது.

மறுபக்கம், சிம்பாப்வே அணியில் இரண்டு மீற்றருக்கும் அதிகமான உயரமானவரான பிளெஸிங் முஸர்பனி அறிமுகத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
comments
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17983
மொத்த பார்வைகள்...2074907

Currently are 227 guests online


Kinniya.NET