வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

Note 7-இன் அம்சங்களை S7-க்கு கொண்டு வருகிறது சம்சுங்

தகவல் தொழில்நுட்பம்

article 1476873805-Samsung

பிரச்சினையைச் சந்தித்த, தனது Galaxy Note 7 திறன்பேசியின் சில அம்சங்களை, தனது, S7 மற்றும் S7 Edge சாதனங்களில் கொண்டு வருவதற்கு சம்சுங் பணியாற்றுகின்றது.

சில Galaxy Note 7-கள் தீப்பற்றுவதாகக் கிடைத்த அறிக்கைகளைத் தொடர்ந்து, Galaxy Note 7-களை மீள அழைத்ததுடன், அதன் தயாரிப்பை நிறுத்துவதாக, கடந்த வார ஆரம்பத்தில், சம்சுங் அறிவித்துள்ளது.

இந்நிலையிலேயே, கருத்துத் தெரிவித்துள்ள சம்சுங், தனது, S7 மற்றும் S7 Edgeஐ, புதிய வசதிகளுடன் மேம்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், தமது Galaxy Note 7-ஐ திருப்பி அளிப்பவர்கள், சந்தையிலுள்ள, வேறு போட்டி நிறுவனங்களின் திறன்பேசிகளிடம் செல்லாமல், சம்சுங் திறன்பேசி ஒன்றுடன் தொடர்வார்கள் என எதிர்பார்க்கிறது.

தனது மீச்சிறப்பு திறன்பேசியொன்றை, வருடத்தில் இரண்டு தடவையே, வழமையாக வெளியிடுகின்ற நிலையில், அடுத்த Galaxy S8 திறன்பேசி, அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதியே அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகையில், அதுவரைக்கும், சம்சுங்கின் மீச்சிறப்பு திறன்பேசியாக S7 Edge விளங்கவுள்ளது. ஆகையால், தனது புதிய போட்டி வரவுகளான, iPhone 7 மற்றும் Google Pixel ஆகியவனற்றுடன் போட்டியிடுவதற்கு, தன்னால் முடிந்த அனைத்தையும் சம்சுங் செய்ய வேண்டியுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே, Galaxy Note 7-இன் செயற்பாடுகளை, மேலும் நெருக்கமாகப் பிரதிபலிக்கும் பொருட்டு, "always-on screen" அம்சத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. "always-on screen" அம்சத்தின் மூலம், செயற்பாடற்ற நிலையில் திறன்பேசி இருக்கும் போதும், திரையில், புகைப்படங்கள், கடிகாரம், அறிவித்தல்களை பார்வையிட முடியும். இந்த வசதிக்காக, ஒரு மணித்தியாலத்தில், ஒரு சதவீதமான மின்னே செலவளியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17980
மொத்த பார்வைகள்...2074904

Currently are 217 guests online


Kinniya.NET