வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

இலங்கையில் விரைவில் Vivo அலை​பேசிகள்

தகவல் தொழில்நுட்பம்

image eebd5b5e25

Vivo, அடுத்த தலைமுறை சாதனங்களுடன் இலங்கையில் தனது தயாரிப்புகளை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் 20க்கும் அதிகமான நாடுகளில் 200 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களைக்கொண்டுள்ள இந்தவர்த்தக நாமம், புதிய சந்தைகளுக்கு தனது செயற்பாடுகளை வேகமாக விஸ்தரித்து வருகிறது.

புத்தாக்கத்தை அடிப்படையாகக்கொண்ட Vivo, உலகளாவிய ரீதியில் ஆறு ஆய்வு நிலையங்களைக்கொண்டுள்ள. இதில் San Diegoஇலும் தனது ஆய்வகத்தைக்கொண்டுள்ளது. இவற்றின் மூலமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான Artificial Intelligence, 5G மற்றும் photography algorithms போன்றன தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்கிறது.

ஆய்வு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுக்கு தன்னை அர்ப்பணித்துள்ள இந்த வர்த்தக நாமம், ஒப்பற்ற ஓடியோ அனுபவத்தை வழங்க Hi-Fi chip சிப் கொண்ட உலகின் முதலாவது அைலேபசியை அறிமுகம் செய்திருந்தது. மேலும் 2014இல், உலகின் முதலாவது 2K resolution மொபைல் திரையைக்கொண்ட திறன்பேசியான XPlay மாதிரியை அறிமுகம் செய்திருந்தது. கடந்த ஆண்டில், உலகின் முதலாவது 20 மெகாபிக்சல் இரட்டை முன்புற கமரா கொண்ட V5Plus திறன்பேசியை அறிமுகம் செய்திருந்தது. இதனூடாக சந்தையில் selfiesகள் எடுக்கும் முறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியிருந்தது.

உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்யும் வகையில் Vivo தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாம் மற்றுமொரு திறன்பேசி வர்த்தக நாமமல்ல. வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை தோற்றுவிக்கும் வகையில் பூரணப்படுத்தலுக்கு முக்கியத்துவம் வழங்கும் ஒரு வர்த்தக நாமம். தொடர்ச்சியான தொழில்நுட்ப மற்றும் தயாரிப்பு புத்தாக்கங்கள் ஊடாக, பூரணப்படுத்தலை நாம் எய்துகிறோம். நாம் புத்தாக்கத்தை பதிவு செய்யும் ஒவ்வொரு வேளையிலும், வாடிக்கையாளர்களை வியப்படையச்செய்வதுடன், அவர்கள் முன்னர் அனுபவித்திராத மகிழ்ச்சியான அனுபவங்களை ஏற்படுத்துகிறோம். வர்த்தக நாமம் எனும் வகையில், Vivo, கமரா மற்றும் இசை ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிக்கிறது.

சிறந்த மொபைல் புகைப்பட மற்றும் ஓடியோ அனுபவத்தை வழங்கும் வகையில் புத்தாக்கங்களை முன்னெடுக்கும். நிபுணத்துவம், ஆக்கத்திறன் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றின் மீதும் நாம் கவனம் செலுத்துகிறோம். உயர் புத்தாக்கம் மற்றும் தொடர்பாடல்கள் ஊடாக இளம் வாடிக்கையாளர்களின் மனம் விரும்பிய நாமமாக திகழ்வதை நாம் அடிப்படையாகக்கொண்டுள்ளோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17980
மொத்த பார்வைகள்...2074904

Currently are 219 guests online


Kinniya.NET