வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

தாதிய மாணவர்கள் பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!

123345552iages

சுகாதார அமைச்சினால் தாதிய மாணவர்கள் பயிற்சிக்கு ஆட்களை இணைத்துக் கொள்வதற்காக தாதிமார் சேவைப் பிரமாணத்தின் விதிகளுக்கு அமைய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதன்படி விண்ணப்பதாரியின் வயதெல்லை 18 வயதுக்கும் 28 வயதிற்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும்,

கல்வித் தகைமை க.பொ.த சாதாரண தர பரீட்சையில் இரண்டு தடவைக்கு மேற்படாமல் தமிழ் அல்லது சிங்களம் கணிதம் விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் உட்பட 4 பாடங்களில் திறமைச் சித்தியுடன் 6 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

அத்துடன் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞான பாட நெறிக்குரிய உயிரியல், கணிதம் மற்றும் விவசாய விஞ்ஞான பாட நெறிக்குரிய அனைத்துப் பாடங்களும் ஒரே தடவையில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரிகள் இம் மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17969
மொத்த பார்வைகள்...2074893

Currently are 224 guests online


Kinniya.NET