வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

ஆன்மிகம்

நோன்பு பற்றிய விளக்கம்

 

09-ramadan-moon4-300

 

நோன்பை முறிக்கும் காரியங்களை ஒருவர், தான் நோன்பு நோற்றுள்ள நினைவு இல்லாமல் செய்து விடலாம். பதினோரு மாதப் பழக்கத்தின் காரணமாக, தாகம் எடுத்தவுடன் தண்ணீரைக் குடித்து விடுவது உண்டு. குடித்தவுடன் அல்லது பாதி குடித்தும் குடிக்காமலும் உள்ள நிலையில் நோன்பு நோற்ற நினைவு வரும். இந்த நோன்பின் கதி என்ன? மறதியாகச் சாப்பிட்டால் அல்லது குடித்தால் எப்போது நினைவு வருகிறதோ உடனே அதை நிறுத்திக் கொண்டு விட்டால் அவரது நோன்புக்கு எள்ளளவும் குறைவு ஏற்படாது. நோன்பாளியாகவே அவர் தனது நிலையைத் தொடரலாம்.

 

புனித ரம்ழான்

 

north-pole-moon2

 

 

 

இறையச்சத்தின் உச்சத்தை அடைய வகை செய்யும் புனித ரம்ழான் .....!

 

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு(நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று)பயபக்தியுடையவர்களாகலாம். (அல்குர்ஆன் 2:183)

   

இலங்கையில் இஸ்லாமிய வங்கித்துறை எதிர்நோக்கும் சவால்கள் – அஷ்ஷெய்க் யூஸுப் முப்தி

yoosuf-mufthi[1]இஸ்லாமி வங்கி முறை குறித்துப் பேசும்போது இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை குறித்தும் இந்த உலகுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. இன்றைய உலகில் இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அதன் யதார்த்தத்தை பலரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

மீள்பார்வை ஊடக மையத்தினால் வெளியிடப்பட்ட "இஸ்லாமிய வங்கி முறை ஓர் அறிமுகம்" எனும் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றும்போது அஷ்ஷெய்க் யூசுப் முப்தி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

   

புத்தகங்களைத் தோற்றுவிக்கும் புத்தகம் பற்றிய விமர்சனம்

-ஏறாவூர் தாஹிர்-

quran 1[1]

இதுவோர் (புதிய அகங்களை) புத்தகங்களைத்தோற்றுவிக்கும் புத்தகம் பற்றிய விமர்சனமாகும். இப்புத்தகத்தின் பரிமாணமும் பெறுமானமும் இதனைப் படித்தவர்களும், அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆய்ந்து உணர்ந்நவர்களுமே அறிவர்.

எனினும் பயபக்தியுடன் இதனை வாசிக்கும்போது இதன்பொருள் தெரியாதவர்களும் கூட தன்னிலை மறந்து பரவசமடையத்தக்க சக்தியுடையதாக இந்நூல் விளங்குவது இதன் சிறப்பம்சங்களிளொன்றாகும். இந்நூலை நுகரும்போதெல்லாம் இந்நூலாசிரியரின் அபாரத் திறமையும், பேரறிவும், தீர்க்க தரிசனமான கருத்துக்களும் எம்மை திகைக்க வைக்கின்றன.

   

முஸ்லிம்கள் செல்லப் பிராணியாக ஏன் நாய் வளர்ப்பதில்லை !

-ஏக்கூப் பைஸல்-

dogs[1]நாய் ஊணுண்னும் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு இதற்கு 220 நுகர்ச்சிக் கண்ணறைகள் இருக்கின்றது. நாயானது மிகக்குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளையும் (16 -20 Hz) மிக அதிக அதிர்வெண் ஒலிகளையும் (70 KHz – 100 KHz) கேட்டுக்கும் தன்மை வாய்ந்தது.

இதனுடைய ஆயுள் காலம் ஏழு ஆண்டுகளில் இருந்து இருபது ஆண்டுகள் வரையாகும். இதன் கர்ப்ப காலம் 62 நாட்கள் ஆகும். நாய்யுடைய உடம்பில் தனாசு என்னும் ஒரு சிறிய பூச்சிகள் உள்ளன இவை நாயின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் தன்மையை கொண்டது. தமிழில் ஆண் நாய்களை கடுவன் என்றும் பெண் நாய்களை பெட்டை எனவும் அழைக்கப்படுகிறது. நாயினை வளர்க்க இஸ்லாம் தடைசெய்திருக்கின்றது .

   

பக்கம் 4 - மொத்தம் 7 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18436
மொத்த பார்வைகள்...2075360

Currently are 415 guests online


Kinniya.NET