வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்தின் தூண்களில் ஒன்று ஓய்வுபெறுகிறது!!

al

தி/கிண்/ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகக் கடமையாற்றிவரும் திரு.கார்த்திகேசு செல்வராசா அவர்கள் எதிர்வரும் 19.05.2015 அன்று தனது சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

இவர் 20.05.1955 இல் ஈச்சந்தீவுக் கிராமத்தில் கார்த்திகேசு காளியாச்சி ஆகியோருடைய மகனாகப் பிறந்தார். 03.02.1992 இல் பயிலுநர் ஆசிரியராக ஆசிரிய சேவையில் இணைந்த இவர் திஃகிண்ஃஈச்சந்தீவு விபுலாநந்த வித்தியாலயத்தில் முதன் முதல் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்பு 30.04.1992 இல் இருந்து திஃகிண்ஃஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்ற இவர் அங்கேயே ஓய்வு பெறும் காலம் வரை தொடர்ச்சியாகக் கடமையாற்றியுள்ளார். அங்கு ஆசிரியராகவும், உதவி அதிபராகவும், பிரதி அதிபராகவும், கடமை நிறைவேற்று அதிபராகவும் கடமையாற்றி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு காரணகர்த்தாவாக இருந்தார்.

இவருடைய இன்னுமொரு முக்கிய சிறப்பு யாதெனில் இதுவரை அவருடைய சேவைக் காலத்தில் ஏழு (07) நாட்கள் மட்டுமே சுகயீன லீவினைப் பெற்றுள்ளார் என்பதாகும். கல்வி அமைச்சினால் சிறந்த ஆசிரியர்களுக்காக வழங்கப்படும் பிரதீபா பிரபா விருதினை மூன்று தடவைகள் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எவருடனும் சினந்து பேசாது நட்புடன் உரையாடுவது இவரது சிறப்பம்சமாகும். இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள், அதிகாரிகளிடத்திலே நன்மதிப்பு பெற்றவராவார். ஈச்சந்தீவுக் கிராமத்தில் வாழ்ந்துவரும் இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.

இவர் பல்வேறு சமூக சேவை அமைப்புக்களிலும் பொறுப்புமிக்க பதவிகளை வகித்து வருகின்றார். ஈச்சந்தீவு கிராம அபிவிருத்திச் சங்கம், ஈச்சந்தீவு கிராமோதய சபை போன்ற அமைப்புக்களில் தலைவராகக் கடமையாற்றி கிராமத்தின் அபிவிருத்திக்கு காரணமாக இருந்தார். இவர் கிண்ணியா பிரதேச மத்தியஸ்த சபையின் ஒரு உறுப்பினருமாவார். நீதி அமைச்சினால் 2009 ஆம் ஆண்டு இவர் சமாதான நீதிவானாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது சேவையைப் பாராட்டும் முகமாக எதிர்வரும் 21.05.2015 அன்று திஃகிண்ஃஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்தில் அதிபர், அசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள், பாடசாலை சமூகத்தால் சேவை நலன் பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு தற்போதைய அதிபர் திரு.மு.மோகனேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.

(இஸ்மாயில் நஸார்)

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17969
மொத்த பார்வைகள்...2074893

Currently are 223 guests online


Kinniya.NET