வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

சகோதரி சனூபா: மரணித்தும் வாழ்பவர்

phஉலகில் பல மனிதர்கள் தோன்றுகின்றார்கள் சிலர் வாழும் காலத்தில் பேரோடும் புகழோடும் வாழ்ந்து விட்டு சென்று விடுகிறார்கள. மரணித்த பின்னர் இவர்களை பற்றி பேசுவதற்கோ, புகழ்வதற்கோ யாரும் இருக்க மாட்டார்கள் சிலர் இருக்;கிறார்கள் வாழும் காலத்திலேயே யாருக்கும் பயனில்லாத மணிதர்கள் இவர்கள் உயிரோடு இருந்தும் மரணித்ததற்கு சமம் இன்னும் சிலர் இருக்கிறார்கள் அவர் மரணித்தாலும் எப்போதும் அடுத்த மனிதர்களின் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள். வரலாறு நெடுகிலும் ஏதோவொரு விதத்தில் இவர்கள் நினைவுபடுத்தப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களைத்தான் வரலாற்று மனிதர்கள் என்று மரியாதையோடு அழைக்கின்றோம்.

இந்த உலக வாழ்க்கை மனிதனுக்கு வழங்கப்பட்ட சோதனை அதனை வெற்றி கொள்ளுவதும் தோல்வியடைவதும் நம் கைகளில் தான் உள்ளது 'உங்களில் செயல்களில் சிறந்தவர் யார் என்று சோதித்துப் பார்ப்பதற்கே அல்லாஹ் வாழ்வையும் மரணத்தையும் படைத்தான்' என அல்லாஹ் ஸூரதுல் முல்கிலே குறிப்பிடுகிறான். எனவே மௌத்துக்கும், ஹயாத்துக்குமிடையே மனிதன் வாழும் வாழ்க்கைதான் அவனது மறுமை வாழ்க்கையை தீர்மானிக்கபோகிறது உலக அலங்காரங்களில் மூழ்கி மறுமையை மறந்து வாழும் மனிதன் மரணத்தின் கடைசி நொடிகளில் கைசேதப்படுகிறான் தான் வாழும் வாழ்க்கையை மறுமைக்காக வேண்டி தியாகம் செய்யும் மனிதன் மரணத்தைக் கண்டு கதிகலங்கிப் போவதில்லை அதை மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறான்.

இந்த வகையில் பிறருக்காக வாழ்ந்து தன் வாழ்வை அர்ப்பணித்து பிறர் மனங்களில் வாழும் ஒருவர்தான் மர்ஹூமா சனூபா அவர்கள் ஒரு முன் மாதிரியான வாழ்க்கை வாழ்ந்த எடுத்துக் காட்டானா பெண்மனி என இவரை குறிப்பிடுவதில் தவறில்லை. சனூபா அவர்கள் 1962.10.10ம் திகதி பொலநறுவை மாவட்டத்தின் திவுலான எனும் முஸ்லீம் கிராமத்தில் பிறந்தார் சாதாரணமான ஒரு குடும்பத்தில் பிறந்தாலும் இஸ்லாமிய சூழலில் மார்க்கப்பன்பாடுகளோடு வளர்க்கப்பட்டார். தனது ஆரம்பக்கல்வியை திவ்லானை அல் அக்சா கல்லூரியில் பெற்றுக் கொண்டார் கல்வி கற்கும் காலத்திலேயே கிராஅத், இஸ்லாமிய கீதம், குர்ஆன் மனனம் போன்ற போட்டிகளில் தன் திறமைகளை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்படாத அக்காலத்திலேயே கல்வியிலும் வெளிக்கள செயற்பாடுகளிலும் தன் திறமைகளை வெளிக்காட்டுபவராக இவர் காணப்பட்டார். மார்க்க செயற்பாடுகளில் அவருக்கு இருந்த ஈடுபாடே இத்தகைய போட்டிகளில் அவரைக் கலந்து கொள்ளத் தூன்டியது எனக் குறிப்பிடுவது மிகையான கூற்றல்ல.

இந் நிலையில் 1985ம் ஆண்டு கிண்ணியாவைச் சேர்ந்த சாலிஹ் (பட்டதாரி ஆசிரியர் ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர்) அவர்களுடன் திருமண வாழ்வில் இணைந்து கொண்டார் 'அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கறீர்கள்' எனும் அல் குர்ஆனிய வார்த்தைக்கு ஒப்ப சிறந்த எடுத்துக் காட்டான கனவன் மனைவிக்குரிய இலக்கணங்களோடு தமது இல்லறப் பயணத்தை தொடர்ந்தார்கள் இஸ்லாமியப் பின் புலம் கொண்ட கணவரின் வழிகாட்டலோடு வாழந்து வந்த சகோதரி சனூபா அவர்களுக்கு நசீரா (இஸ்லாகி) அவர்களின் தொடர்பு வாழ்வில் பாரிய மாற்றங்களை கொண்டு வந்தது நசீரா (இஸ்லாகி) சிலாபம் டொக்டர் முர்த்தலாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது இவரது தொடர்பானது சகோதரி சனூபா அவர்களின் வாழ்வை புடம்போட்டது உண்மைதான் அவரது பேச்சு, சிந்தனை, செயற்பாடுகள் எல்லாவற்றிலும் ஒரு மாற்றம் உண்டாவதற்கான அடித்தளத்தை அவர் இட்டார். சகோதரி சனூபா அவர்கள் தனது மகளின் கல்விக்காக கிண்ணியாவிற்கு சென்றது அங்கும் இஸ்லாமிய சூழல் காணப்பட்டமை அவருக்கு வாய்ப்பாக அமைந்தது அங்கு தனத குடும்பம் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தோடு நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டு தஃவா பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது.

சகோதரி சனூபா அவர்கள் 2008ம் ஆண்டுக்குப் பிறகு ஜமாஅத்தே இஸ்லாமியோடு உள்ள தொடர்பை அடுத்து தனது அறிவு ஆழுமையை சுயமாக வளர்த்துக் கொண்டு அல் குர்ஆனை கற்கின்ற விடயத்தில் மிக ஆர்வத்தோடு ஈடுபட்டார் அந்த ஈடுபாடு கிண்ணியா சஹ்தியா பெண்கள் அரபுக் கல்லூரி உருவாக்கத்தில் பங்கு கொள்ளும் அளவுக்கு அவரைக் கொண்டு சென்றது அரபுக் கல்லூரி உருவாக்கத்தில் ஒரு இணைப்பாளராக இணைந்து கொண்ட இவர் அங்கு கற்கும் மாணவிகளுக்கு ஒரு முன் மாதிரியாகவும் வழிகாட்டியாகவும், தாயாகவும் மாறுகிறார்.

ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் தனது மகளின் கல்வியைக் கருத்திற்கொண்டும் தனது சுகயீனத்தைக் கருத்திற் கொண்டும் ஸஃதியா பெண்கள் அரபுக்கல்லூரியிலிருந்து விலக நினைத்தபோது 'உங்களுடய ஒரு மகளுக்காக நூறு மகள்களை விட்டு சென்று விடாதீர்கள் டீச்சர்' என சஃதியா மாணவிகள் சொன்னார்கள் இது அவர் மேல் மாணவிகள் வைத்திருந்த நன்மதிப்பினதும் பாசத்தினதும் வெளிப்பாடு என்று சொல்வதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும். மாணவிகள் இவ்வாறு உரிமையோடு கேற்கும் அளவுக்கு அவருக்கும் மாணவிகளுக்குமிடையே ஓர் அத்தியந்த பிணைப்பு காணப்பட்டது.

ஸஃதியா மாணவிகள் சனூபா அவர்களை 'பெரிய டீச்சர்' என்றுதான் அழைப்பார்கள். 2014.04. 26ம் திகதி திடிரென ஏற்பட்ட மாரடைப்பினால் கிண்ணியாவில் வைத்து வபாத்தானார்கள் (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்) அடுத்தவர்களோடு இனிமையாக பழகுகின்ற உதவுகின்ற உபசரிக்கின்ற நற்குணம் கொண்ட சனூபா எனும் பெரிய டீச்சரின் மரனம் அநேகரின் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது.

ஒருவர் மரணித்த பின்னர் அவரைப்பற்றி மக்கள் பேசுகின்ற வார்த்தைகள் போதும் ஒருவர் எத்தகைய வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்பதை அறிய.

சகோதரி சனூபாவின் ஜனாஸாவில் கலந்து கொண்டவர்கள் அவரைப்பற்றி நல்லவிதமாகவே பேசிக் கொண்டார்கள். சிறந்த பன்பாடுகளுள்ள நல்பெண்மனி என்றே பலரும் பேசிக் கொண்டார்கள் நல்ல மனிதன் என்று நாளு பேர் பேசினாலே போதும் ஒரு மனிதன் இந்த உலகில் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள அத்தகைய உன்னதாமன வாழ்க்கையைத்தான் சகோதரி சனூபா அவர்கள் வாழந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள் முன்மாதிரியான பெண்மணி ஒருவர் வாழ்ந்திருக்கிறார் என்பதை வெளியே தேட வேண்டிய அவசியமில்லை எங்களுக்குள்ளேயே வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு சனூபா எனும் பெரிய டீச்சர் ஓர் உதாரணமாகும்.

யா அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து உனது உயர் தரமான ஜன்னதுல் பிர்தௌசை அவருக்குக் கூலியா வழங்குவாயாக! அவரது நல்லமல்களை ஏற்றக் கொள்வாயாக!

ஸ்ரீலங்கா ஜாமாஅத்தே இஸ்லாமி- கிண்ணியா மகளிர் பிரிவு

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18450
மொத்த பார்வைகள்...2075374

Currently are 233 guests online


Kinniya.NET