வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

சாதனையாளர்கள்

கிண்ணியா குழந்தைக்கவி எம்.ரி.சஜாத் "இரத்தினதீபம்" விருது வழங்கி கௌரவிப்பு!!

mt

கிண்ணியா குழந்தைக் கவி எம்.ரி.சஜாத் மரபுக் கவிதைகளினூடாக தனக்கான ஓர் இடத்தை பதிவு செய்து இலக்கிய உலகில் விசாலமுடன் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றாh.இவர் அன்மையில் எழுதி வெளியீடு செய்த செல்லமே என்னும் சிறுவர் பாடல் தொகுயினூடக வெளியுலகுக்கும் தன்னை அடையாளப் படுத்தியதோடு இந்நூல் சிறந்த விருதுக்கான பரிசுகளை மூன்று இடங்களில் பெற்றமை குறிப்பிடத் தக்கது அவை கிழக்கு மாகாண சபை விருது. யாழ் இலக்கியப் பேரவை விருது, மற்றும் அரச சாகித்திய விருகள் என வழங்கப் பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தார்.

 

திருகோணமலையில் எனது நாட்கள்..! (Short Biography of Dr.EG.Gnanakunalan)

Dr-Gunalan

1983ம் ஆண்டுமுதல் இன்று வரை திருகோணமலை மாவட்டத்திற்கு தனது சேவையை முற்றுமுழுதாக வழங்கிய டாக்டர். ஈ.ஜி.ஞானகுணாளன் அவர்கள் தமது 30 வருட அரச மருத்துவ சேவையிலிருந்து இவ்வாண்டுடன் (2013) ஓய்வுபெறுகிறார்.  இத்தருணத்தில் திருமலையில் அவர் வாழ்ந்த காலம் பற்றி அவரால் தெரிவிக்கப்பட்ட ஒரு சிறிய வரலாற்றுத்தொகுப்பு..

 

கவிஞர் தேசகீர்த்தி பி.ரீ.அஸீஸ் அவர்களுடனான நேர்காணல்!

PT Azees

பல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்கள் அண்மைக் காலமாக இலக்கிய வானில் பிரகாசித்து வருகின்றார். கவிதை கிராமியக் கவி, தாலாட்டுப் பாடல், குறுங்கதை, சிறுகதை என பல்வேறு துறைகளையும் தொட்டு நிற்கும் இவர் சிறந்த நூலுக்கான விருதையும், தேசகீர்த்தி பட்டத்தையும் அண்மையில் பெற்றுள்ளார்.

   

மக்கள் மனங்­களில் ­வாழும் பேரா­சி­ரியர் மர்ஹும் கே.எம்.எச். காலிதீன். - கிண்ணியாவின் பெருமை!!

Prof Kalideenதிரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லுள்ள, கிண்­ணியா, ஈச்­சந்­தீவு கிரா­மத்தில் 1944ஆம் ஆண்டு பிறந்த மர்ஹும் காலிதீன் இவ்­வு­லகை விட்டுப் பிரிந்து வரு­டங்கள் சென்றாலும் அவ­ரது நினை­வுகள் இன்னும் பசுமை­யா­கவே உள்­ளன.

கிண்­ணியா மகா வித்­தி­யா­லயம், கொழும்பு ஸாஹிரா கல்­லூரி என்­ப­வற்றில் கல்வி பெற்ற அவர் 1966ஆம் ஆண்டு கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்டார். பட்டக் கல்­வியை அங்கு நிறைவு செய்த அவர் பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தில் அர­புத்­து­றையில் சிறப்புப் பட்டம் பெற்றார்.

 

நான் நம்பிக்கையாக நடக்கின்ற நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏன் கொண்டு வரப்பட வேண்டும்..? - முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்

najeeb[1]மாகாண சபையின் செயற்பாடுகள். சமகால நிகழ்வகள் குறித்து கிழக்கு முதலமைச்சர் நஜீப்.ஏ.மஜீத் நவமணிக்கு வழங்கிய விஷேட செவ்வி

கேள்வி: மாகாண சபையின் செயற்பாடுகள் பற்றிக் கூறுவீர்களா?

பதில்: போரினாலும், சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணம் தற்போதைய ஆட்சிக்காலத்தில் பல்வேறு துறைகளிலும் பாரிய முன்னேற்றத்தினைக் கண்டு வருகின்றது. கல்வி, சுகாதாரம், சுற்றுலா, விவசாயம் உட்பட சகல துறைகளிலும் திட்டமிட்ட அடிப்படையில் முன்னேற்றம் கண்டு வருகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஆகியோரின் வழிநடத்திலில் மாகாண அபிவிருத்திப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களும் வேறுபாடுகள் எதுவுமின்றி அபிவிருத்தி செய்யப்படும். மூவின மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் சகல திட்டங்களும் முன்னெடுக்கப்படும். சகல தரப்புடனும் கலந்துரையாடல்களை நடாத்தி மாகாணத்தினை சகல துறைகளிலும் முன்னேற்றமடையச் செய்வதே எனது பிரதான நோக்கமாகும்.

   

பக்கம் 2 - மொத்தம் 3 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17969
மொத்த பார்வைகள்...2074893

Currently are 228 guests online


Kinniya.NET