செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

நூல் அறிமுகம்

பூங்காவனம் 12 ஆவது இதழ் மீது ஒரு பார்வை!!

 எம்.எம். மன்ஸுர் - மாவனெல்ல

Poo2013 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்களுடன் மலர்ந்திருக்கும் பூங்காவனத்தின் 12 ஆவது இதழ் வாழ்த்துவோர், வீழ்த்துவோரின் செயற்பாடுகளைத் தாண்டி வாசிப்பின் மகத்துவத்தை வாசகர்களுக்கு எடுத்துக்காட்டி இலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவரான தர்காநகரைச் சேர்ந்த திருமதி. சுலைமா சமி இக்பாலின் முன் அட்டைப் படத்துடன் தனது படைப்புக்களைத் தந்திருக்கிறது.

இதழின் உள்ளே திருமதி. சுலைமா சமி இக்பால் அவர்கள் 1977 ஆம் ஆண்டு தனது 17 ஆவது வயதில் எழுத்துலகில் நுழைந்ததில் இருந்து இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கும் அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். களுத்துறை மாவட்டத்தின் தர்காநகர் மீரிப்பன்னையைப் பிறப்பிடமாகவும், மாவனல்லை கிருங்கதெனியவை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், தர்காநகர் முஸ்லிம் மகளிர் மத்திய கல்லூரியில் ஆரம்பம் முதல் உயர்தரம் வரை கல்வி பயின்று ஆசிரியராகி அதே பாடசாலையில் பல வருடங்கள் கற்பித்து, தான் கற்ற பள்ளிக்கூடத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறார். ஜும்ஆ, முஸ்லிம் ஆகிய இஸ்லாமியச் சஞ்சிகைகளில் எழுதியவர். தினகரன், தினக்குரல், வீரகேசரி, விடிவெள்ளி போன்ற பத்திரிகைகளில் சிறுகதைகளை எழுதி வருகிறார். 1984 முதல் சுமார் பத்தாண்டு காலப் பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை ஷநெஞ்சோடு நெஞ்சம் மாதர் மஜ்லிசுக்கு| பிரதித் தயாரிப்பாளராக இருந்து பங்களிப்புச் செய்து வந்திருக்கிறார்.

வைகறைப் பூக்கள் (1987), மனச்சுமைகள் (1988), திசை மாறிய தீர்மானங்கள் (2003) என்ற பெயர்களில் மூன்று சிறுகதைத் தொகுதிகளையும், ஊற்றை மறந்த நதிகள் (2009) என்ற பெயரில் சமூக நாவல் ஒன்றினையும் வெளியிட்டு இருக்கிறார். இந்நாவல் 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் நர்கிஸ் சஞ்சிகையும், மல்லாரிப் பதிப்பகமும் இணைந்து நடத்திய சர்வதேச இஸ்லாமிய நாவல் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர இதே அமைப்புக்கள் 2009 ஆம் ஆண்டு சர்வதேச ரீதியில் நடத்திய சிறுகதை, கவிதைப் போட்டிகள், 2011 ஆம் ஆண்டு பாணந்துறையில் இயங்கும் ஜனசங்சதய அமைப்பு நடத்திய சிறுகதைப் போட்டி, மலையக எழுத்தாளர் மன்றம் நடத்திய தேசிய ரீதியிலான சிறுகதைப் போட்டி, அல்ஹஸனாத் இஸ்லாமிய சஞ்சிகை நடத்திய நாடளாவிய சிறுகதைப் போட்டி, 1997 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் மாத்தளைக் குழு நடத்திய சிறுகதைப் போட்டி, 2006 அரசியல் அமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு ஆக்கம் எனும் கருத்திட்டத்தில் நடத்திய சிறுகதைப் போட்டி, 2007 சப்ரகமுவ மாகாண சாகித்திய சுய நிர்மாணப் போட்டி, 2012 மாவட்ட மாகாண அரச சாஹித்திய சிறுகதைப் போட்டி என ஏராளமான போட்டிகளில் பங்குபற்றி முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்கள் என்ற தோரணையில் பரிசில்களும், பாராட்டுப் பத்திரங்களும் பெற்றுள்ளார். மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களால் தங்கப் பதக்கம் அணிவிக்கப்பட்டும், மத்திய மாகாண கல்வி அமைச்சர் வீ. ராதாக்கிருஷ்ணன் அவர்களால் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். 2008 ஆம் ஆண்டு அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ கலாஜோதி பட்டத்தை இவருக்கு வழங்கி கௌரவித்திருக்கிறது.

 

"கடைசி வேரின் ஈரம்" சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு!

 வெலிகம ரிம்ஸா முஹம்மத்

MMAliAkbarகடைசி வேரின் ஈரம் என்ற சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர் கிண்ணியா எம்.எம். அலி அக்பர் அவர்கள். ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் தனது பெயரை பதித்துக்கொண்டவர். கலாபூஷணம் விருதை பெற்றுள்ள எம்.எம். அலி அக்பர் அவர்கள், ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

112 பக்கங்களுடைய இந்தத்தொகுதியில் 12 சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அணிந்துரையை வழங்கியருக்கின்றார் கிண்ணியாவின் இன்னொரு கவிஞரும், சிறுகதையாளருமான ஏ.எம்.எம். அலி அவர்கள்.

 

வாழ்வியலினூடான அகம் புறம் பேசும் எஸ்.பாயிஸாஅலி கவிதைகள்.

FaizaAliF

 

ஜே.பிரோஸ்கான்-

கவிதைகளின் வளர்ச்சியில் அல்லது மாறுதலில்இன்று வேகத்திருப்ப நிலை காட்டாறுபோல ஒவ்வொரு படைப்பு மனங்களினூடாகவும் வெளிப்படுவதைக் காணலாம்.அது போன்றுதான் சற்று மாறுதலான மொழிநடையோடு இலங்கையின் பெண் படைப்பாளிகளின் வரிசையில் தனக்கென ஒரு இடத்தினை அசத்தலான முறையிலே தக்கவைத்துக் கொண்டிருக்கும் எஸ்.பாயிஸாஅலி கவிதைத்தொகுப்பினூடாக வெளிப்படுத்தியிருப்பதை சொல்ல முடியும்.

 

 

முஜாரத்தினுடைய சுய சிந்தனையினூடாக பதிவு செய்யப்பட்டிருக்கும் றிஸானாவும் எதுவும் பேசா தவாத்மி சுவர்களும்.

Risana1புத்தகத்தின் பெயர்- றிஸானாவும் எதுவும் பேசாதவாத்மி சுவர்களும்.

தொகுப்பாசிரியர்- ஏ.கே.முஜாரத்

தொலைபேசி இல- 0775294492/ 0756064355

வெளியீடு- பேனா பப்ளிகேசன்

பூக்களால் ஒரு புகைப்படம் தந்த ஏ.கே.முஜாரத் 'றிஸானாவும் எதுவும் பேசா தவாத்மி சுவர்களும்' என்ற இரண்டாவது தொகுதியை தொகுப்பாக நடுகை செய்து எல்லோருடைய மனசுகளிலும் வரவேற்பைப் பெறுகிறார்.

றிஸானா நபீக் ஏழு வருட காலமாக தவாத்மி சிறைச்சுவர்களுக்குள் மன வேட்கையுடன் தனது எதிர்பார்ப்புக்களையும் அவாவுகளையும் சொல்ல முடியாமல் அடக்க முயற்சித்து அடக்க முடியாமல் மௌனமுடைத்து அதன் வெளிப்பாட்டினூடாக என்னென்ன சொல்லி புலம்பியிருப்பாளோ என்ற தனது தவித்தலின் பின்புலம்தான் றிஸானாவும் எதுவும் பேசா தவாத்மி சுவர்களும் என்ற தனது புத்தாக்கத் தொகுப்புக்கு யோசித்தலானது என்று கூறும் கிண்ணியா ஏ.கே.முஜாரத் நீள்துயரங்கள் என்னை ஆட்கொள்ளும் போது கவிதை எழுதக் கூடிய என்னால் இப்படித்தான் அழ முடிகிறது என்கின்றார். இதனூடாக ஏ.கே.முஜாரத் றிஸானாவின் இழப்பினால் துயரங்கள் அல்லது கவலைகளின் எல்லைகள் எவ்வளவோ அவ்வளவு தூரத்துக்குள் அவர் பின்னப்பட்டிருப்பது அவரின் புலம்பலின் நிமிசங்களால் உணர முடிகிறது.

 

கவிஞன் என்றும் கவிஞன்தான்! கவிஞன் கவிதைச் சிற்றிதழ் மீது ஒரு பார்வை!!

எம்.எம். மன்ஸுர் - மாவனெல்ல

kavignanசதாசிவம் மதன் என்பவரை பிரதம ஆசிரியராகக் கொண்டு மீன்பாடும் தேனாட்டில் இருந்து வெளிவரும் காலாண்டு சஞ்சிகையான கவிஞன் என்ற சிற்றிதழின் 21 ஆவது இதழ் கிடைக்கப் பெற்Nறுன். முழுக்க முழுக்க கவிதைகளையே உள்ளடக்கி வரும் இவ்விதழ், சகல கவிஞர்களுக்கும் களம் அமைத்துக் கொடுப்பதோடு கவிதை எழுதத் துடிக்கும் புதுக் கவிஞர்களுக்கும் சிறந்ததொரு ஊடகமாகவும் அமைந்துள்ளது.

 

பக்கம் 5 - மொத்தம் 7 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16381
மொத்த பார்வைகள்...2073305

Currently are 230 guests online


Kinniya.NET