செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

மாணவர்களிடமுள்ள திறமைகள் வெளிக் காட்டும் இடம் தான் பாடசாலை அதிபர் எஸ்.டி. நஜீம்

கல்வி செய்திகள்

151515

மாணவர்களிடம் பல்வேறு திறமைகள் காணப்படுகின்ற அத்திறமைகளை வெளிக்காட்டும் மேடையாக பாடசாலை காணப்படுவதுடன் அதனை உரியவகையில் இனங்கண்டு வெளிக்காட்ட வேண்டிய பெறுப்பினை ஆசிரியர்கள் சுமந்துள்ளனர்.

ஒவ்வொரு மாணவனிடமும் ஏதோவொரு திறமை காணப்படுகன்றது இத்திறமைகள் வெட்கம் ,பயம், அச்ச உணர்வு என்பவைகளினால் மாணவர்கள் சில நேரம் வெளிக்காட்ட தயங்குகின்றனர். இவ்வாரானவர்களை உரிய முறையல் நெறிப்படுத்தி அவர்களை சமூகத்திற்கு இளங்காட்ட வேண்டிய மிகப் பெரிய பணியும் ஆசிரியர் மீது சுமத்தப்படுகின்றது.

அதில் ஒரு அங்கமாகத்தான் ஒழிந்திருந்த திறமை ஒன்று இன்று வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதன் மூலம் பாடசாலையும் அதனுடன் இணைந்த பிரதேசமும் இன்று சந்தோசமடைகின்றது. அந்த வகையில் சென்ற 2014.10.17 திகதி நடைபெற்ற மீலாத் நபி விழா கலாச்சார மாகாண மட்டப் போட்டி நிகழ்ச்சிஎமது அல் முஜாஹிதா வித்தியாலயத்திற்கு ஒரு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது. ஆரம்பப் பிரிவு அரபுப்பேச்சுப் போட்டியில் தரம் 4 இல் கல்வி கற்கும் சு.ஆ. றிப்னாஸ் என்ற மாணவன் இரண்டாம் இடம் பெற்று வெண்ணலப் பதக்கத்தினை சுவீகரித்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளான். வரலாற்றில் முதல் தடவையாக இப்பாடசாலையில் இருந்து மாகாண மட்டத்திற்கு தெரிவானமை இப்பாடசாலை அண்மைக்காலங்களில் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஆர்வம் காட்டி வருவதனை சுட்டிக்காட்டுகின்றது. என்னுடன் இணைந்து இப்பாடசாலை ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடன் இன்று இப்பாடசாலை மாணவர்கள் மாணாக மட்ட ரீதியாக வெற்றிபெறும் வாய்ப்பினைப் பெற்று வருகின்றனர். அந்த வகையில் இம்மாணவணை நெறிப்படுத்திய ஆசிரியரையும் பாடசாலைக்கு பெருமை சேர்த மாணவனுக்கும் அதிபர் என்ற வகையில் பாரட்டுதல்களையும் வாழ்த்துக்கனையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

2014 மீலாத் நபி கலாச்சார நிகழ்ச்சியில் ஆரம்பப்பிரிவு அரபுப் பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்ற R.M.. றிப்னாஸ் என்ற மாணவனை கௌரவித்து இன்று (2014.10.24) பாடசாலை மாணவர் காலைக் கூட்;டத்தில் அல் முஜாஹிதா வித்தியாலயஅதிபர் ஆற்றிய உரை.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16374
மொத்த பார்வைகள்...2073298

Currently are 239 guests online


Kinniya.NET