செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் சாதனை மாணவிகளை பாராட்டும் விழா

கல்வி செய்திகள்

12

 

ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் சாதனையாக கருதப்படும் தரம் 5ம் ஆண்டில் 35 மாணவர்கள் சித்தியடைந்துள்ளமையினை பாராட்டும் விதமாக சித்தியடைந்த மாணவிகளையும், கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டும் விழவானது இன்று பாடசாலையின் கேட்போர் கூடத்தில் பாடசாலையின் பகுதிதலைவர் AUM.பாறூக் தலைமையில் மிகவும் கோலாகளமக இடம்பெற்றது.

இவ்வைபவத்துக்கு பிரதம அதீதியாக முன்னால் அமைச்சரும் கிழக்கு மாகான சபை உறுப்பினருமான அல்ஹாஜ் MSS.அமீர் அலி அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், விஸேட அதிதீதிகளாக ஜனாப் AL.மீராஸாஹிப்(DEO) IM.இப்றாஹிம்(ADE),MS.கலீல்றஹ்மான்(ADE), M.சுபைர்(Ret.DEO), ALநெய்னா மொஹம்மட் (பாடசாலையின் முதல்வர்) ஆகியோரும், சிறப்பு அதீதியாக அல்-கிம்மா நிறுவனத்தின் பிரதிப் பனிப்பாளர் ஜனாப்.ஜாபீர், பிரதேச சபை உறுப்பினர் IT.அஸ்மி ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

இம்மாணவர்களை திறம்பட வழிநடாத்தி சித்தியடைவதற்கு காரணமாக இருந்த ஆசிரியர்களான ML.இஸ்ஹாக் NL.ஜபிர் SIM.சாதாத் ஆகியோரையும், பாடசாலையின் முதல்வரையும், முக்கியமாக மாணவிகளையும் பாராட்டி உரையாற்றிய பிரதம அதீதி MSS.அமீர் அலி அவர்கள் சித்தியடைந்த எல்லா மானவர்களும் அதிகளவான புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளமையானதும் அதிலும் முக்கியமாக மாணவிகளான ஃபாத்திமா றுஜா, பாத்திமா ஹின்ஃபா ஆகிய மாணவிகள் 185 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதையிட்டு தான் பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக குறிப்பிட்டதுடன், அதிகளவில் வருகை தந்திருந்த மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் முன்னிலையில் சித்தியடைந்த மாணவிகளுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் நினைவுச் சின்னங்களை வழங்கி கெளரவித்தார்.

 

அஹமட் இர்ஸாட். 

10

15

07

Share
comments

Comments   

 
0 #1 Guestshume 2018-03-10 19:53
guest test post
bbcode: http://temresults2018.com/
html
http://temresults2018.com/ simple
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16372
மொத்த பார்வைகள்...2073296

Currently are 236 guests online


Kinniya.NET