செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

மாணவர்களின் ஆளுமை விருத்தியினூடாக விசேட தேவையுடைய மாணவர்களை இனங்கண்டு பராமரிக்க முடியும்; அதிபர் எஸ்.டி.நஜீம்

கல்வி செய்திகள்

m1

விசேட தேவையுடைய மாணவர்கள் எமது பாடசாலையில் இல்லாவிட்டாலும் இவ்வாறான மாணவர்கள் யார் அவர்கள் எவ்வாறான தன்மைகளை வெளிக்காட்டுவாhர்கள் என்ற விடயங்களை நாம் தெரிந்து கொள்வது அவசியமாகும். வழமைக்கு மாற்றமான செயல்களை வெளிக்காட்டும் இம்மாணவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைப்பதிலிருந்து மாணவர்களாகிய நீங்கள் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும்.

உடல் ரீதியாக மட்டுமல்லாமல் உளரீதியாகவும் சில மாணவர்கள் விசேட தேவைக்கு ஆளாகின்றனர். இவர்களை நிதானமாக இனங்கண்டு அவர்களின் உள ரீதியான தேவைகளை நிறைவேற்றுகின்ற போது அல்லது அதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குகின்ற போது அவர்கள் சமூகத்தில் ஒன்றிணைந்து செயற்படக் கூடியவர்களாக மாற வாய்ப்புக்கள் உள்ளது.

கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்தின் விசேட கல்விப் பிரிவினரால் தி/கிண் /அல் முஜாஹிதா வித்தியாலயத்தில் 2014 .09.13 திகதி சனிக்கிழமை நடாத்திய விசேட தேவையுடைய மாணவர்களை இனங்கண்டு அவர்களை எவ்வாறு முகாமை செய்வது தொடர்பான செயலமர்வில் வித்தியாலய அதிபர் எஸ்.டி.நஜீம் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்செயலமர்விற்கு வலயக்கல்வி அலுவலகத்தின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி ணுஆஆ. நளீம் கலந்து கொண்டிருந்தார். இச்செயலமர்வினை ஆசிரிய ஆலேசகர்களான யுசு. ஹஸ்ஸாலி,யுஆ. அனிபா ஆகியோர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு செயற்பட்டனர்.

(ஏ.எம்.அப்துல் பரீத்)

m2

m3

Share
comments

Comments   

 
0 #1 Monpreday 2018-04-26 03:27
Buy Propecia In California Levitra 10 Orodispersible Comprimes generic cialis canada: http://tadalaffbuy.com Viagra Verona Real Viagra Online Canada
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16374
மொத்த பார்வைகள்...2073298

Currently are 228 guests online


Kinniya.NET