செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கல்வி செய்திகள்

20140906 151735

 

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் சிறந்த மாணவ தலைவர்களை உருவாக்கும் நோக்கில் இலங்கை முஸ்லிம் இளைஞர் சம்மேளனத்தின் அணுசரனையில் நடைபெற்ற தலைமைத்துவ பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை தாருஸ்ஸலாம் வித்தியாலய மண்டபத்தில் சனிக்கிழமை (06) நடைபெற்றது.

சம்மாந்துறை சமாதானத்திற்கான அமைப்பின் தலைவர் எஸ்.எல்.றியாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சவூதி தூதுவராலய வெகுசன தொடர்பு அதிகாரியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம், இலங்கை முஸ்லிம் இளைஞர் சம்மேளனத்தின் செயலாளர் வை.பீ.சலீம், சம்மாந்துறை பிரதேச செயலக தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் சீ.திருக்குமார், தாருஸ்ஸலாம் வித்தியாலய அதிபர் ஏ.சீ.ஏ.எம்.இஸ்மாயில், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ வழிகாட்டி எனும் நூலின் முதல் பிரதியினை சவூதி தூதுவராலய வெகுசன தொடர்பு அதிகாரியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் உயர்பீட உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் சம்மாந்துறை சமாதானத்திற்கான அமைப்பின் தலைவர் எஸ்.எல்.றியாஸிடமிருந்து

பெற்றுக் கொண்டார்.

(எம்.எம்.ஜபீர்)

SAM0118

SAM 0120

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16374
மொத்த பார்வைகள்...2073298

Currently are 224 guests online


Kinniya.NET