செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23, 2019
   
Text Size

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மு.காங்கிரஸ் குழு சந்திப்பு!

DSC 0908

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் செயலாளர் நாயகம் இராஜாங்கஅமைச்சர் எம்.ரீ.ஹஸனலி,கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான  ஹாபிஸ் நஸீர் அஹமத்,கட்சியின் வெளிவிவகார பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோருக்குமிடையிலான சந்திப்பு சனிக்கிழமை மாலை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது.

பிரஸ்தாபக் கலந்துரையாடல் இறுதியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நகர அபிவிருத்தி,நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்ப அமைச்சருமானரவூப் ஹக்கீம் தெரிவித்ததாவது,

இந்தியவெளிவிவகாரஅமைச்சர் சுஷ்மாசுவராஜுக்கும்,எங்களுக்குமிடையிலானசந்திப்புமிகவும் மகிழ்ச்சிகரமாகவும்,ஆக்கபூர்வமாகவும் இருந்தது.

இனப்பிரச்சினைதீர்வுவிவகாரத்தில் இந்தியாகாத்திரமானபங்களிப்பைச் செய்யுமென்றுஅவர் எங்களிடத்தில் கூறினார்.

எங்களைப் பொறுத்தவரை கிழக்கு மாகாணத்தில் அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்திவருகின்றோம் என அவரிடம் கூறினோம். மீட்கப்படாத காணிகள் தொடர்பில் எமது நிலைப்பாட்டை அவரிடம் எடுத்துக் கூறினோம்.

தேர்தல் விஷயத்தில் சிறிய கட்சிகளின் பிரதி நிதித்துவத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பெரிய தேசிய கட்சிகளுடன் சுமுகமாகப் பேசி இணக்கப்பாட்டுக்கு வருவதனூடாக சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் அபிலாஷைகளையும் உள்வாங்கியதாக உத்தேச தேர்தல் சீர்திருத்தம் அமையவேண்டியதன் அவசியம் பற்றியும் நாங்கள் அவரிடம் கூறினோம்.

எவ்வாறிருந்தபோதிலும், இன்றைய சூழ்நிலையில் இனப்பிரச்சினைத் தீர்வுமுயற்சிகள் மற்றும் தேசிய நல்லிணக்கத்திற்கான நகர்வுகள் குறித்துஅவர் எங்களிடம் கேள்வியெழுப்பியபோது,யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் அந்த விடயங்களில் பொதியகவனம் செலுத்தப்படவில்லை என்றாலும் அடுத்து வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தான் அவை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படலாம் என நாங்கள் நினைப்பதாக அவரிடத்தில் சொன்னோம்.

கிழக்கு மாகாணத்தில் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தைஆரம்பித்து வைக்கும் விதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட  இதர அரசியல் கட்சிகளையும் அரவணைத்து தேசிய ஆட்சி யொன்றை அங்கு நாம் நடாத்தி வருவதையிட்டு நாம் அவர்களிடத்தில் சுட்டிக்காட்டிய போது அமைச்சர் சுஷ்மாசுவராஜ் அதையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த விடயத்தில் நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு,ஐக்கிய தேசிகட்சி ஆகிய வற்றுடன் புரிந்துணர்வு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருந்தது பற்றியும் அவரிடம் தெரிவித்தோம்.

சுஷ்மாசுவராஜின் முன்னைய விஜய மொன்றின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரையும்,அதன் முக்கியஸ்தர்களையும் இந்தியாவுக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்திருந்தது பற்றி குறிப்பிட்டு அவ்வாறான அழைப்பொன்றை  இம்முறையும்  அவர் விடுத்தாரா என ஊடகயவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஹக்கீம். முன்னர் இந்தியாவின் எதிர்கட்சித் தலைரவராக அவர் இருந்தபொழுது இருந்த போது சர்வகட்சி குழுவொன்றுடன் தன்னையும் கட்சி பிரமுகர்களையும் கொழும்பில் சந்தித்தபோது அப்படியான அழைப்பை விடுத்ததாகவும். இம்முறை அதுபற்றி அவர் கூறாது விட்டாலும்,அவசியம் ஏற்படுகின்றபோது இந்தியாவுக்கு செல்லக் கூடிய வாய்ப்பு தமது கட்சிக்கு எப்பொழுதும் இருப்பதாகவும் கூறினார்.

அது மட்டுமல்லாது,முன்னைய விஜயத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அப்போதைய அரசாங்கத்துக்கிடையில் ஓர் இணைப்புப் பாலமாக இருக்குமாறு அவர் எங்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்றும் அமைச்சர் ஹக்கீம் சொன்னார்.

 (டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் - ஊடகச் செயலாளர்)

 

 

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...36983
மொத்த பார்வைகள்...2315542

Currently are 368 guests online


Kinniya.NET