யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்: தற்போதைய நிலை என்ன?

 jaffna7

 

 

ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிண்ணியா

 jaffna6

இந்த நாடு மூன்று தசாப்த காலமாக கொடிய யுத்தமொன்றிற்கு முகங்கொடுத்து வந்தது. கடந்த 2009 ஆம் ஆண்டில் இந்த நாட்டை சின்னாபின்னாப்பாடுத்திய யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

யுத்தம் முடிவிற்கு பின்னர் சமாதானமும் சுபிட்சமும் மலர்ந்துள்ளதாக சொல்லப்பட்டாலும் இனங்களக்கிடையில் ஒரு சுமுக நிலை முழுமையாக தோன்றியதாக தெரியவில்லை. இதற்குக் காரணம் இனங்களுககிடையில் பாகுபாடு விட்டுக்கோடுப்பின்மை, ஏற்றத்தாழ்வு, பகைமை, சந்தேகம் என்பன தொடர்ச்சியாக காணப்படுவதாகும்.


வடக்கில் வாழ்கின்ற மக்களிடம் பரஸ்பரம் புரிந்துணர்வை கட்எயேழுப்ப நினைத்தால் இடம்பெயர்ந்த முஸ்லிம் தமிழ் மக்களின் பாரபட்சமற்ற மீள்குடியேற்றத்தின் மூலம்தான் சாத்தியப்படுத்த முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. இன்று மீள்குடியேறி வாழ்கின்ற மக்கள் எவ்வித குரோதமும் இன்றி அந்நியோன்யமாக வாழ்ந்து வருவது இதற்கு சான்றாகும்.


வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்தில் குறிப்பாக யாழ்ப்பாண முஸ்விம்களின் மீள்குடியேற்றமானது மிக முன்னியத்துவம் வாய்ந்ததாகும். யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இன்னும் பூரனத்துவம் பெறாத நிலையிலேயே காணப்படுகின்னது. வடமாகாண சபை அமைக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவுக்கு அங்கு மாற்றங்கள் நிகழவில்லை. எல்லா சமூகங்களுக்கும் சேவை செய்ய வேண்டிய அரச உத்தியோகத்தர்கள் முஸ்லிம்கள் விடயத்தில் பாரபட்சமும் பாகுபாடும் காட்டியுள்ளமையை அங்கு வாழ்கின்ற மக்கள் வேதனையுடன் கூறுகின்றார்கள்.


மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களில் சிலருக்கு வீடுகள் வழங்கப்பட்டுளள போதும் அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளோ, கல்வி, சுகாதார, தொழில் வசதிகளோ செய்து கொடுக்கப்படவில்லை இன்னும் பலருக்கு வீட்டு வசதிகள் செய்து கொடுக்கப்படாது குடிசைகளிலும் வாடகை வீடகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.
யாழ்ப்பாண முஸ்லிம்களின் தற்போதைய மீள்குடியேற்ற நிலைமைகளை தெரிந்து கொள்வதற்காக மீள்குடியேற்றப்பட்ட மக்களிடமும் மக்கள்பிரதிநிதிகளிடமும் அரச உத்தியோத்தர்களிடமும் கேடறிந்தபோது அவர்களின் கருத்துக்கள்

FB IMG_1482671986311

மீள்குடியேற்றம் தொடர்பாக கேட்டபோது.


றிஸ்வான் :- 2009 ஆம் ஆண்டு மீள்குடியேறி வந்தும் சரியான உதவிகள் முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை பல வரையறையினால் இளம் சந்ததியினருக்கு வீடுகள் கிடைப்பதில்லை தொழில் பிரச்சினை இருப்பதால் முஸ்லிம்கள் இன்னும் மீள்குடியேற தயங்குகிறார்கள்.


உதவிகள் கிடைக்கப் பெற்றதா? 

மிள்குடியேறியபோது மண்வெட்டி கோடரி என ஒரு சில பொருட்கள் வழங்கப்பட்டது இது 2010 ஆண்டு ஆறு மாதம் நிவாரனம் கொடுத்தார்கள். 5000 ரூபா பணம் வழங்கினார்கள் இந்த 5000 ரூபா பணம் கூட 25000 ரூபா வழங்குவதற்கான திட்டமாக இருந்தது எல்லா மக்களிடமும் 25000 ரூபா தருவதாக கூறி தான் ஒப்பம் எடுத்தார்கள் மீதமான பணம் கொடுக்கப்படவில்லை இது தொடர்பாக கூட்டமொன்றில் ஐயூப் அஸ்மின் மீதமான பணத்தை வழங்குமாறு கூறியிருந்தார்


மீள்குடியேற்றம் ஒழுங்காக நடைபெறவில்லை என முறையீடுகள் மேற்கொள்ளவில்லையா?


இங்கு சம்மேளனங்கள் இருக்கின்றது ஒவ்வொரு அமைப்புக்களும், பள்ளி நிருவாகமும் சேர்ந்து ஒரு குழுவை அமைத்து இது சம்பந்தமாக பிரதேச சபையோடும், அமைச்சர்மார்களுடன் சம்மந்தப்பட்ட எல்லோருடனும் பேசியிருக்கின்றோம். முஸ்லிம் மக்களின் வாழ்வாதாரம் சம்மந்தமாகவும் மீள்குடியேற்றம் சம்மந்தமாகவும் பல விடயங்களை தெரியப்படுத்தியுள்ளோம். அவர்களும் சட்ட ரீதியாக செய்கின்ற போது எங்கள் மக்களுக்குக்கு கிடைக்காமல் போகின்ற நிலை ஏற்படுகின்றது.


இதனால் அரசாங்கத்தை குறை சொல்கின்றீர்களா? அல்லது அதிகாரிமார்களை குறை சொல்கின்றீர்களா?


அரசாங்கத்தை குறை சொல்லமுடியாது அதிகாரிகார்கள் தான் அமைச்சர்களினால் செய்துகொடுக்கும்படி கூறினாலும் அதனை செய்கின்ற அதிகாரி மார்கள்தான் எங்களை கஸ்டப்படுத்திடுயிருக்கின்றார்கள்


மீள் குடியேற்றத்தினால் உங்களுக்கான உரிமைகள் (வாக்கு , கல்வி ,சுகாதாரம்) பூரணமாக கிடைக்கின்றதா?


சரியாக கிடைக்கவில்லை என்றுதான் சொல்லுவேன் முதலாவது சுகாதாரம் 2011 ஆம் ஆண்டு பதிய சோனகர் தெருவில் வடிகால் அமைப்பு ஆரம்பி;த்தார்கள் அது ஒழுங்கான திட்டமிடலில் செய்யப்படாததனால் நீர் தேங்கி நுளம்புகள் பெருகுகின்றது இது சுகாதாரத்துக்கு பாதிப்பாகவுள்ளது
கல்வியை பொறுத்தவரை இங்கு உஸ்மானிய்யா கல்லூரி இயங்குகின்றது அங்கு சரியான உரிய பாடத்துக்கான ஆசிரியர்கள் இல்லை ,ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. பாடசாலை ஒழுங்கற்ற விதத்தில் செயற்படுகின்றது


மீள் குடியேற்றம் செய்யப்பட்டால் நிலையான சமாதானம் உருவாகும் இது தொடர்பாக உங்கள் கருத்து?

மீள் குடியேற்றம் உண்மையில் சரியாக நடந்தால் எல்லோரும் குடியேறிவிடுவார்கள் முஸ்லிம் மக்கள் எல்லோரும் எதிர்பார்த்து கொண்டிருப்பது முழு உரிமையும் கிடைக்க வேண்டும் என்று இதனால் சமாதானமாக முஸ்லிம் மக்கள் தமிழ் மக்கள் சேர்ந்து ஒற்றுமையாக வாழக்கூடிய நிலை இருக்கும் இப்போது கூட ஒற்றுமையாக தான் இருக்கின்றார்கள் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் ஒற்றுமையாக தான் இருந்தார்கள் தமிழ் முஸ்லிம்களுக்குள் எந்தவித பிரச்சினையும் இல்லை விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்படடார்கள். அரச அதிகாரிகள்தான் சந்தரப்;பத்துக்கு மட்டும் செய்து தருவதாக கூறுகின்றார்கள். பின்னர் பாகுபாடு காட்டி பாரபட்சம் காட்டுவதாகவும்; அவர் கூறினார்.

jaffna8

 

பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன்

மீள் குடியேற்றம் தொடர்பாக உங்கள் கருத்து?

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் முழுமை பெறவில்லை மீள்குடியேற்றம் என்பது இன்றைக்கு, நாளைக்கு முடியப்போறகின்ற ஒரு அலுவலும் அல்ல அரசாங்கம் மீள்குடியேற்றம் சம்பந்தமாக மிக மந்தமான போக்கை கடைப்பிடிக்கின்றது. அரசு பாகுபாடு காட்டிதான் மீள் குடியேற்றத்தை செய்து கொண்டிருக்கின்றது.


மீள்குடியேற்றம் என்றால் ஒருவனுக்கு தன்னுடைய இடத்தில் எல்லாவிதமான வசதிகளையும் செய்து கொடுப்பது அரசாங்கத்தின் கடமை அதிலிருந்து தவறிவிட்டது இருந்தாலும் ஒன்றுமில்லாமல் போய்விடக்கூடாது என்ற ஒரு காரணத்துக்காகத்தான் இந்த மக்கள் தங்களை வருத்திக் கொண்டு மீள்குடியேற்றத்துக்கு போகின்றார்கள.


முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை பொறுத்தவரையல் மந்தகதியில் தான் நடக்கின்றது அவர்கள் அவர்களுடைய பிள்ளைகளை வெளிமாவட்டங்களில் படிக்க வைத்ததனால் இங்கு பதிந்தாலும் இன்னும் அங்கேயே இருக்கின்றார்கள். மெல்ல மெல்ல வந்து கொண்டிருக்கின்றார்கள் பதிந்தவர்களுக்கும் இருக்கின்றவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. ஒரேயடியாக வரலாம் என்று இல்லை ஏனென்றால் பிள்ளைகளின் கல்விக்கு ஏற்ற வகையில் தயார் செய்து கொண்டுதான் வரவேண்டும்.


வாழ்வாதாரம் சம்பந்தமாக பார்த்தால் கொடுத்த உதவிகளைக் கூட அரசு நிறுத்திவிட்டது முழுமையாக தங்களுடைய காலில் நிற்குமட்டும் பார்க்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை யுத்ததினால்தான் இவ்வளவு அனர்த்தங்களும் ஏற்பட்டது. தமிழ் பேசுகின்றவர்களை இரண்டாம் தரமாக பார்ப்பது அரசுக்கு வழமையாகிவிட்டது

jaffna4

வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் :-


கேள்வி : முஸ்லிம்களின் மீள்குயேற்றம் குறித்து என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?


பதில்: மீள்குடியேறிய மக்களுக்கு காணிப் பிரச்சினை, தொழில் பிரச்சினை என பல பிச்சினை காணப்படுகின்றன. முஸ்லிம்களின் மிள்குடியேற்றத்தை தமிழ் மக்கள் சவாலாகப் பார்கின்றனர். இதனால் சில பிச்சினைகள் ஏற்படுகின்றன. வடமாகாண சபையோ மத்திய அரசாங்கமோ மீள்குடியேற்ற விடயத்தில் முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை.


கேள்வி: மீள்குடியேற்றத்தில் உங்கள் பங்களிப்பு என்ன?


பதில்: மீள்குடியேற்ற மக்களுக்கு வீடகளைப்பெற்றுக் கொடுப்பதற்கும் காணித் தேவைகளை நிறைவு செய்வதற்கு முன்னின்று செயற்படுகின்றேன். அதேவேளை இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முயற்சிகளை மேற்கொள்கின்றேன். அண்மையில் கூட 100 பேருக்கான சமையல் பாத்திரம், சிறு கைத்தொழிலுக்கான பொருட்கள் வழங்கினோம்.


2009 ஆம் ஆண்டு தொடக்கம் ஏழு வருடங்களாக மீள் குடியேற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது இனிவரும் காலங்களில் எத்தனை ஆண்டுக்குள் பூரணமாக நிறைவடையும்?


2009 ஆம் ஆண்டு 100 நாளுக்குள் அரசாங்கம் பணிப்பு விடுத்தது பின்னர் இரண்டு வருடங்களாக அவகாசம் வழங்கியது எங்களுடைய கோரிக்கையாக ஆகக்குறைந்தது 10 வருடம் இப்போதைக்கு இதுவும் போதாது கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் 2025 ஆம் ஆண்டு வரைக்கும் விசேட திட்டதுக்காக தேவைப்படும் என கூறப்பட்டது ஐ.நா கருத்துப்படி 2030 ஆம் ஆண்டில் தான் நிறைவடையும் என கூறினார்.

5

 

வட மாகாண சபை உறுப்பினர் அர்னாலட் :

மீள்குடியேற்றம் தொடர்பாக கேட்டபோது.


 1990 ஆம் ஆண்டு வெளியேறிய முஸ்லிம் சகோதரர்களுடைய பரம்பரை ,குடும்பங்கள் ,பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மக்களுக்கான சகல கட்டுமான வசதிகளையும் இந்த அரசு செய்து கொடுக்கவேண்டும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு.

மீள்குடியேற்றத்தில் அரசு சரிவர செய்தாலும் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக மக்கள் கூறுகின்றார்கள் உங்கள் கருத்து?


நிச்சயமாக மறுப்பதற்கு இல்லை ஏனென்றால் மக்களுடைய குறைகளை எங்களுடன் வந்து மனவேதனையுடன் சொல்கின்றார்கள். அதிகாரிகள் தங்களை மிகவும் மோசமான முறையில் முறையில் கையாலுவதாகவும் எடுத்தெரிந்து பேசுவதாகவும், இதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு ஆதாரங்களை வைத்திருக்கின்றோம்.பாதிக்கப்பட்ட மக்களை சரியான முறையில் வழி நடாத்தப்படவேண்டும் ஆனால் இரண்டாம் தரப்பினராக சில முஸ்லிம் சகோதரர்கள் முஸ்லிம் என்ற காரணத்துக்காக வஞ்சிக்கப்படுவதாக உணர்கின்றார்கள் அவ்வாறு பாரபட்சம் காட்டுவது எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. மிகவும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விடயமாகும்.


நானும் அஸ்மினும் சிறந்த உதாரணம் நாங்கள் பாரபட்சம் காட்டுவதில்லை இதன் வெளிப்பாடு இன நல்லிணக்கம் தமிழ் முஸ்லிம் என்பது பிரித்துப்பார்க்க முடியாது. மத ரீதியாக வேறு என்றாலும் தமிழ் பேசுகின்ற அடையாளமாக தான் இருக்கின்றோம் என கூறினார்.

 jafna2

யாழ்ப்பாண மாவட்ட மீள்குடிடீயற்ற உத்தியோத்தர் எஸ் .சிவமின்தன்


1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லிம் குடும்பங்களில் இதுவரைக்கும் 1450 குடும்பங்கள் பதிவு செய்துள்ளார்கள் மீள்குடியேருவதற்கு 600 குடும்பங்கள் குடியேறியுள்ளார்கள் பதிவு செய்த 1450 குடும்பங்களும் முன்னர் இருந்த இடத்துக்கு போய்விட்டர்கள் இவர்களுக்கான வாழ்வாதார வசதிகள் செய்து கொடுத்தால் வருவதாக சொல்லியுள்ளார்கள் பதிவு செய்த முஸ்லிம் குடும்பங்களை இடம்பெயர்ந்தவர்களாகதான் பார்க்கின்றோம்.

1


யாழ்ப்பாண பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் சு.சிவக்குமாரன் :-


காணி உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் வசதியுள்ளவர்கள.; இவர்கள் வேறு இடங்களில் குடியிருக்கின்றார்கள். ஆகவே இங்கு வரமாட்டடார்கள் இங்கு இருக்கின்ற அதிகமான முஸ்லிம்களுக்கு காணி இல்லை வர இருக்கின்றவர்களும் அவ்வாறு தான் நாங்கள் யார் யாருக்கு காணி தேவை என்ன என்ன தேவை என்ற விபரத்தை கச்சேரி எல்லா இடங்களுக்கும் அனுப்பிவிட்டோம் முஸ்லிம் தலைவர்களுக்கும் வழங்கியுள்ளோம்.
மக்கள் பிரச்சினை என்னவெண்றால் காணி உரிமை இல்லாமல் வீடு கட்ட முடியாது நிரந்தரமாகவும் இருக்க முடியாது வீட்டுத்திட்டம் பேசுவதற்கு முதல் காணி உரிமை சம்பந்தமான தீர்கமான முடிவு மேல் அதிகாரிகளினால் எடுத்தால் தான் பிரச்சினை தீரும். என கூறினார்

யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை அரசியல் வாதிகளின் ,அரச அதிகாரிகளின் , பொது மக்களின் கருத்தை பார்க்கின்ற போது சரியான முறையில் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை என்பதே யதார்த்தமாகவும் , உண்மை தன்மையாகவும் காணப்படுகின்றது. முழுமையாக செய்யாவிட்டாலும் ஒரளவு செய்யப்பட்டுள்ளது. மீள்குடிNயுற்றத்துக்கான நடவடிக்கையை எடுக்கின்ற அரசு சரியான முறையில் செய்யுமாக இருந்தாலும் அதிகாரிகளும் அவ்வாறு பாரபட்சம் இன்றி செயற்படுவர்களாக இருந்தால் இன , மதங்களுக்pடையிலான நல்லிணக்கத்தையும் , சமாதானத்தையும் கட்டியெழுப்பலாம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மக்களுடைய கருத்தும் இதுவாகவே காணப்படுகினற்து எனவே சமாதனத்தையும் ,நல்லிணக்கத்தையும் உருவாக்குகின்றபோது இவ்வாறான பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

comments