செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

ஐ.நாவின் புதிய தடை போருக்கான செயல்: வட கொரியா

 99348108_gettyimages

தங்கள் நாடு மீது விதிக்கப்பட்ட ஐ.நாவின் புதிய பொருளாதாரத் தடைகள், போருக்கான செயல் என வட கொரியா விவரித்துள்ளதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஐ.நாவின் நடவடிக்கைகள் முழு பொருளாதார முற்றுகைக்கும் சமமானதாகும் என கேசிஎன்ஏ அரசு செய்தி நிறுவனத்திடம் பேசிய வெளியுறத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. வட கொரியாவின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதே அமெரிக்காவை எதிர்ப்பதற்கான ஒரே வழி எனவும் அது கூறியுள்ளது.

ஐ.நாவின் புதிய தடைகள், ''எமது குடியரசின் இறையாண்மையை மீறுவதாகும். கொரிய தீபகற்பம் மற்றும் பரந்த பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையையும் அமைதியையும் சீர்குலைக்கும் போருக்கான செயல் இது'' எனவும் வட கொரியா கூறியுள்ளது.

வட கொரியா நடத்திய சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக, அந்நாடு மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெள்ளிக்கிழமையன்று ஒருமனதாக வாக்களித்துள்ளது.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16383
மொத்த பார்வைகள்...2073307

Currently are 207 guests online


Kinniya.NET