செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

பன்றியின் பித்தப்பை கல்லால் கோடீஸ்வரரான விவசாயி

pri 61707178[1]

சீனாவில் தனது பண்ணையில் கிடைத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் விவசாயி ஒருவர் கோடீஸ்வரர் ஆன சம்பவம் அப்பகுதியில் வாழும் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சீனாவில் 51 வயதான விவசாயி ஒருவருக்கு அவரது பண்ணையில் உள்ள விவசாய நிலத்தில் விதைத்துக் கொண்டிருந்த போது, வித்தியாசமான கல் போன்ற பொருள் கிடைத்தது.

அது 4 அங்குல நீளமும் 2.5 அங்குல அகலமும் கொண்டிருந்தது. அதன் மீது அடர்த்தியான ரோமங்கள் படிந்திருந்தன.

அது பற்றிய விபரங்களைத் தன் நண்பர்களிடம் அவர் கேட்டுள்ளார்.

அதன்போது, பன்றியின் பித்தப்பையில் உருவாகிய 'கல்' என தெரிய வந்தது.

அதை 'கோரோசனை' என்றும் அழைப்பார்கள்.

இது பலவிதமான நோய்களைத் தீர்க்கும் ஒரு மருந்தாகும்.

மேலும், உடலில் சுரக்கும் நச்சுகளை வெளியேற்றும் தன்மையுடையது. எனவே இதை மருந்துகளில் கலக்கின்றார்கள். சீனாவில் இது விலை மதிக்க முடியாதது.

விவசாயிக்கு கிடைத்துள்ள இந்த பன்றி பித்தப்பைக் கல் சுமார் 4500 பவுண்ட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவர் 'திடீர்' கோடீஸ்வரர் ஆகியுள்ளார்

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16370
மொத்த பார்வைகள்...2073294

Currently are 223 guests online


Kinniya.NET