செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

சீனாவில் பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

 

126359101China[1]

கிழக்கு சீனாவில் பாரம் ஏற்றிவந்த ஒரு டிராக்டர் அடுத்தடுத்து இரு பஸ்கள், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின்மீது மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷங்டாங் மாகாணத்தின் முக்கிய நகரான ஜிபோ பகுதியில் கடந்த வியாழக்கிழமை பாரம் ஏற்றிவந்த ஒரு டிராக்டர் வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து இரு பஸ்கள், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக சீன ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவத்தில் காயமடைந்த 20க்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் அந்த செய்திகள் தெரிவித்துள்ளன

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16383
மொத்த பார்வைகள்...2073307

Currently are 216 guests online


Kinniya.NET