செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018
   
Text Size

வங்கதேசத்தின் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் தூக்கிலிடப்பட்டார்.

 

dhaka-655x360[1]

வங்கதேசத்தின் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் மோதியுர் ரஹ்மான் நிஜாமி (72), டாக்கா சிறையில் நேற்று நள்ளிரவு தூக்கிலிடப்பட்டார்.

72 வயதான மோதியுர் ரஹ்மான், வங்கதேசத்தில் 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயற்பட்டவர் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அவர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்காக, வங்கதேசத்தில் உள்ள சர்வதேச போர்க்குற்ற நடுவர் நீதிமன்றம், கடந்த 2014 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

அவரது தலைமையிலான அல்-பதர் ஆயுதக் குழுவினர் நிகழ்த்திய கொடூரமான படுகொலைகள், சித்திரவதைகள் உள்ளிட்ட பிற குற்றங்களுக்காக அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்து. அந்தத் தீர்ப்பை எதிர்த்து வங்கதேச உச்ச நீதிமன்றத்தில் அவர் அடுத்தடுத்து தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், கடைசியாக அவர் தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்து அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை கடந்த வியாழக்கிழமை உறுதி செய்தது. இந்நிலையில், டாக்கா நகரில் உள்ள மத்திய சிறையில் மோதியுர் ரஹ்மான் நிஜாமியை அவரது மனைவி, மகன்கள், மருமகள்கள் உள்ளிட்ட உறவினர்கள் 20 பேர் செவ்வாய்க்கிழமை இறுதியாக சந்தித்தனர்.

அதனைத் தொடர்ந்து, சிறையதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தின் பின்னர் ரஹ்மான் நிஜாமி தூக்கிலிடப்பட்டுள்ளார்.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16366
மொத்த பார்வைகள்...2073290

Currently are 217 guests online


Kinniya.NET