சனிக்கிழமை, மார்ச் 23, 2019
   
Text Size

அமைச்சர் ருவான் விஜயவர்த்தன கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

IMG 0161

ஊடகத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ருவான் விஜயவர்த்தன இன்று கடமைகளை ஊடகத்துறை அமைச்சில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

 இதனை முன்னிட்டு ஊடகத்துறை அமைச்சுக்கு உட்பட்ட அரச தகவல் திணைக்களத்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர்களான பி.ஹெரிசன் அஜித் பி. பெரேரா பார்தின் கேட்போர் கூடத்தில் அமைச்சரை வரவேற்பதற்கான வைபவம் ஏற்பாடு செய்யப hளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாறசிக்க அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக்க கலுவேவ உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். IMG 0098

ஊடகத்துறை அமைச்சர் ருவான் விஜயவர்த்தன உரையாற்றுகையில் இந்த பதவி பொறுப்பை எனக்கு வழங்குவதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பலருடன் கலந்துரையாடினார். அவர்கள் ஊடாகவே நான் இதனை அறிந்துக்கொண்டேன். இந்த பதவி பல்வேறு சவால்களைக் கொண்டது. சிறந்த ஊடக கலையை முன்னெடுத்து பொது மக்களுக்கு உண்மையான தகவல்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்துறையில் தொடர்புப்பட்டுள்ள ஊடகவியலாளர்களின் கௌரவத்தை பாதுகாப்பதற்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதே எனது நோக்கமாகும்.

பொது மக்கள் சிவில் அமைப்புகளிடையே உண்மைகளை அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டுள்ளனர். அமைச்சர் என்ற ரீதியில் இத்துறையில் சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவையும் ஒன்றிணைத்து செயல்படுவதற்கு எதிர்பார்த்துள்ளேன். அனைத்து தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றேன் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

IMG 0108

அமைச்சர் பி.ஹெரிசன் உரையாற்றுகையில் பொறுமையுடன் பிரச்சினைகளை செவிமடுத்து அனைவரையும் மதித்து செயல்படக்கூடியவர் புதிய ஊடகத்துறை அமைச்சர் ருவான் விஜயவர்த்தன ஆவார். இவர் ஊடக குடும்பத்தை சேர்ந்தவர். இதனால் இந்த பொறுப்பை சிறப்பான முறையில் முன்னெடுப்பார் என்று தெரிவித்தார்.IMG 0161

அமைச்சர் அஜித் பி பெரேரா உரையாற்றுகையில் ஊடகத்துறையில் நாட்டுக்கு பெருமையை சேர்த்த குடும்பத்தை சேர்ந்த இவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டமை சிறப்பானதாகும். இவர் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் இது தொடர்பில் சிலருக்கு பிரச்சினைகள் இருக்கக்கூடும் நானும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவே கடந்த சில மாதங்களாகவே பணியாற்றி வருகின்றேன். எனது அமைச்சு பொறுத்தவரையில் அனைத்து தீர்மானங்களையும் நானே மேற்கொண்டு வருகின்றேன். புதிய அமைச்சரும் அவ்வாறே செயற்பட முடியும் என்பதே அனைவரும் புரிந்துக்கொள்ளவேண்டும். என்றும் தெரிவித்தார்.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...31169
மொத்த பார்வைகள்...2263610

Currently are 207 guests online


Kinniya.NET