செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 18, 2018
   
Text Size

‘எனக்கு வைத்த பொறியே நம்பிக்கையில்லா பிரேரணை’

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

maithripala

தனக்கு எதிரான குற்றவியல் பிரேரணையைக் கொண்டுவர வழியமைத்து விடும் என்பதால் தான், கடந்த 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை தான் நிராகரித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுடன் நேற்று நடத்திய சந்திப்பின்போ தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

"நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக் கொள்வதற்கு, நவம்பர் 14ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் முதலாவது பந்தியை நீக்குமாறு நிபந்தனை விதித்தேன்.

அதற்குக் காரணம், அதில் ஒக்ரோபர் 26ஆம் திகதி , பிரதமரைப் பதவி நீக்கியும், புதிய பிரதமரை நியமித்தும், ஜனாதிபதி வெளியிட்ட இரண்டு அரசிதழ் அறிவிப்புகளும் அரசியலமைப்புக்கு முரணானவை, செல்லுபடியற்றவை என்று கூறப்பட்டிருந்தது.

அந்தப் பந்தியை உள்ளடக்கிய பிரேரணையை ஏற்றுக் கொண்டால், நான் அரசியலமைப்பை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமக்க நேரிடும்.

பின்னர் அது, எனக்கு எதிராகவும் பயன்படுத்தப்படலாம்.

அதனை நான் ஏற்றுக்கொண்டால், நான் அரசியலமைப்பை மீறிவிட்டதாக, எதிர்காலத்தில் என் மீது குற்றவிசாரணைப் பிரேரணையை கொண்டு வர முடியும்." என்றும் தெரிவித்துள்ளார்.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17659
மொத்த பார்வைகள்...2148875

Currently are 114 guests online


Kinniya.NET