ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 24, 2019
   
Text Size

இவ்வருட தேசிய மீலாத் விழா நிகழ்வு கொழும்பில்

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

hisbullah

முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடத்தப்படும் தேசிய மீலாத் விழா -2018 நிகழ்வு எதிர்வரும் 20ஆம் செவ்வாய்க்கிழமை திகதி கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நடைபெறவுள்ளது.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

தேசிய மீலாத் நிகழ்வு இம்முறை மன்னாரில் நடத்த திட்டமிட்டிருந்த போதிலும் நாட்டின் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலையில் குறித்த நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்துக்கு பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று செவ்வாய்க்கிழமை முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்துக்கு விஜயம் செய்திருந்தார். அங்கு திணைக்கள அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது தேசிய மீலாத் நிகழ்வினை ஏற்கனவே திட்டமிட்ட தினத்தில் கொழும்பில் நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

நபி (ஸல்) அவர்களின் போதனைகளையும் வாழ்க்கை வழிமுறையையும் மக்களுக்கு நினைவூட்டுவதற்காக கொண்டாடப்படும் மீலாதுன் நபி விழாவின் மூலம் இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய சமூகங்களுக்கு அறிவூட்டக்கூடிய ஒரு நிகழ்வாகவே இவ்விழா ஏற்பாடு செய்யப்படுகின்றது.

முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடத்தப்படும் தேசிய மீலாத் விழா -2018 நிகழ்வு  எதிர்வரும் 20ஆம் செவ்வாய்க்கிழமை திகதி கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நடைபெறவுள்ளது. நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். 
தேசிய மீலாத் நிகழ்வு இம்முறை மன்னாரில் நடத்த திட்டமிட்டிருந்த போதிலும் நாட்டின் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலையில் குறித்த நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்துக்கு பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்  கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று செவ்வாய்க்கிழமை முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்துக்கு விஜயம் செய்திருந்தார். அங்கு திணைக்கள அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது தேசிய மீலாத் நிகழ்வினை ஏற்கனவே திட்டமிட்ட தினத்தில் கொழும்பில் நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். 
நபி (ஸல்) அவர்களின் போதனைகளையும் வாழ்க்கை வழிமுறையையும் மக்களுக்கு நினைவூட்டுவதற்காக கொண்டாடப்படும் மீலாதுன் நபி விழாவின் மூலம் இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய சமூகங்களுக்கு அறிவூட்டக்கூடிய ஒரு நிகழ்வாகவே இவ்விழா ஏற்பாடு செய்யப்படுகின்றது.
Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...27469
மொத்த பார்வைகள்...2225654

Currently are 310 guests online


Kinniya.NET