குறிஞ்சாகேணி பாலம் தொடர்பில் உரிய ஆவணங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிவைப்பு

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

DS Kani

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலம் புனரமைப்பு தொடர்பாக, கிண்ணியா மக்களால் நேற்று (02) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கிண்ணியா பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து, இது தொடர்பான விளக்கங்களை, ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு, வெளிநாட்டுத் தூதுவர் ஒருவர் மூலமாக தனக்கு அழைப்பு வந்ததாக, கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் ஹனி தெரிவித்தார்.

உரிய ஆவணங்கள் உடன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

ஹஸ்பர் ஏ ஹலீம்

comments