கிண்ணியா பிரதேச சபையின் புதிய தவிசாளராக சனூஸ் தெரிவு.!

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

 

sa1

கிண்ணியா பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு, பிரதேச சபையின் விசேட சபை அமர்வு மண்டபத்தில், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மணிவண்ணன் தலைமையில், இன்று நடைபெற்றது.

கடந்த மாதம், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் கே.எம்.நிஹார், தவிசாளர் பதவியில் இருந்து இராஜினமா செய்வதாக உத்தியோகபூர்வமாக மாகாண உள்ளூராட்சி திணைக்களத்துக்கு அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அதே கட்சியைச் சேர்ந்த எம்.எச். சனூஸ், திறந்த வாக்கெடுப்பின் மூலம் தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

உப தவிசாளராக ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஏ.எம்.பாஸித் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

 

sa2

comments