வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

கிண்ணியாவின் முதல்வர்கள் - 12 :முதல் செய்தியாளர் மர்ஹூம் எம்.ஏ.எம்.யூசுப்

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

7896548கிண்ணியாவின் முதலாவது பத்திரிகைச் செய்தியாளர் மர்ஹூம் எம்.ஏ.எம்.யூசுப் அவர்களாவர். இவர் 1927.07.20 இல் பெரிய கிண்ணியாவில் முஸ்தபா ஆலிம் - கதீஜா உம்மா தம்பதிகளின் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

அப்போது கிண்ணியா மகளிர் கல்லூரியின் ஒரு பக்கத்தில் இயங்கிய பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் கல்வி கற்றார். சிரேஷ்ட தகைமை (எஸ்.எஸ்.சீ) சான்றிதழ் பெற்றார். தமிழ் மொழியில் அதிக புலமை பெற்றிருந்தார்.

மூதூர்த் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் எம்.ஈ.எச். முகம்மது அலி இவரது சகபாடியாவார். இதனால் மர்ஹூம் அலி பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட 1952 ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையின் மூதூர்த் தொகுதிக்கான செய்தியாளர் நியமனத்தை இவருக்கு பெற்றுக் கொடுத்தார்.

இந்த வகையில் கிண்ணியாவின் முதலாவது பத்திரிகையாளர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார். தொடர்ந்து இப்பணியைத் திருப்திகரமாக செய்ய முடியாது என்ற காரணத்துக்காக 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் தனது செய்தியாளர் பதவியை இராஜினாமாச் செய்தார். இவரது திருப்திகரமான சேவையைக் கருத்தில் கொண்டு தினகரன் பத்திரிகை இவருக்கு நற்சான்றிதழ் ஒன்றை வழங்கியுள்ளது.

கிண்ணியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் இலிகிதராகச் சில வருட காலம் பணியாற்றிய இவர் பின்னர் சின்னக் கிண்ணியா பகுதியில் வியாபார முயற்சியில் ஈடுபட்டார். 1984.01.13 ஆம் திகதி முதல் சின்னக் கிண்ணியா பகுதிக்கான முஸ்லிம் விவாகப் பதிவாளராக நியமனம் பெற்ற இவர் 1996 ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்து வந்தார். அரசியல் காரணங்களுக்காக இப்பதவி இவரிடமிருந்து மீளப் பெறப்பட்டது.

தற்போது கிண்ணியா முஸ்லிம் மகளிர் இயங்கும் இடத்தின் ஒரு பகுதி இவருடைய தந்தையாரின் காணியாகும். பாடசாலைக்காக இவர் அக்காணியை அன்பளிப்புச் செய்திருந்தர்.

இவர் கற்கின்ற காலம் முதல் தமிழ் இலக்கணஇ இலக்கியத்தில் புலமை பெற்றிருந்ததால் இவருக்கு கற்பித்த யாழ்ப்பாண ஆசிரியர்கள் இவரை பண்டிதர் என்று அழைத்தனர். இவர் இறக்கும் வரை இச் சிறப்புப் பெயராலேயே அழைக்கப் பட்டு வந்தார். இப்போது இப்பெயர் இவரது பிள்ளைகள்இ Nபுரப் பிள்ளைகளுக்கும் சிறப்புப் பெயராகப் பயன்படுத்தப் படுகின்றது.

எங்களது வீட்டுக்கு சற்று அயலில் இவரது வீடு இருந்ததால் சிறு வயது முதல் இவரோடு பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இவர் ஒரு முறை சொன்ன விடயம் இன்றும் எனது ஞாபகத்தில் உள்ளது.

நாயறு

திங்க

சே.

பொத

விசாலமா

வெளிக்காட்டாம

சனியன

கிழமை நாட்களை இலகுவாக ஞாபகப் படுத்துவதற்காக இவர் கையாண்ட முறைதான் இது.

தனது 81 வயதில் 2008.05.13 ஆம் திகதி இவர் காலமானார். இவரது ஜனாஸா றஹ்மானியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தேடல்

ACM-Mussil (1) ஏ.ஸீ.எம்.முஸ்இல் Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

கிண்ணியா

Prev Next

கிண்ணியாவின் முதல்வர்கள் -30; முதல் முது கல்விமாணி ஏ.எஸ்.மஹ்ரூப்

கிண்ணியாவின் முதல்வர்கள் -30; முதல் முது கல்விமாணி ஏ.எஸ்.மஹ்ரூப்

கிண்ணியாவின் முதலாவது முதுகல்விமானி ஏ.எஸ்.மஹ்ரூப் அவர்களாவர். இவர் அப்துல் ஸமது –மர்ஹூமா உம்மு குல்தூன் ஆகியோரின் புதல்வராக 1958.06.16 இல் கிண்ணியா ...

03 மே 2017 Hits:5134

Read more

கிண்ணியாவின் முதல்வர்கள் - 29 முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்

கிண்ணியாவின் முதல்வர்கள் - 29 முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்

  கிண்ணியாவின் முதல் ஆசிரியை திருமதி றைஹானத்தும்மா அப்துல் ஸலாம் அவர்களாவர். இவர் 1950.03.05 இல் மர்ஹூம்களான செய்னா மரக்காயர் சேகப்துல்லாஹ் - கா...

25 ஒக் 2016 Hits:9241

Read more

கிண்ணியாவின் முதல்வர்கள் - 28 முதல் சட்டமாணி ஜனாப்.ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார்

கிண்ணியாவின் முதல்வர்கள் - 28 முதல் சட்டமாணி ஜனாப்.ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார்

கிண்ணியாவின் முதல் சட்டமாணி (LLB) ஜனாப். ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார் அவர்களாவார். இவர் மர்ஹூம் அப்துல் வாஹிது – ஹைருன்னிஸா தம்பதிகளின் புதல்வராக 1957.04.25ஆ...

27 செப் 2016 Hits:8507

Read more
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17967
மொத்த பார்வைகள்...2074891

Currently are 217 guests online


Kinniya.NET