வியாழக்கிழமை, ஜூலை 19, 2018
   
Text Size

கிண்ணியாவின் அமைவிடம்!

பயனாளர் தரப்படுத்தல்: / 60
குறைந்தஅதி சிறந்த 

 kinniya[1]

எஸ்.எம்.சரீப் (முன்னாள் அதிபர்)
உதவி :- எம்.ஏ. அப்துல் அஸீஸ் (ஓய்வு பெற்ற ஆசிரியர்)

இலங்கைத்திரு நாட்டின் ஆதவன் உதயமாகும் கீழ் திசையில் இந்நாட்டு மக்களால் மாத்திரமன்றி சர்வதேசங்களாலும் பெரிதும் விரும்பப்படுகின்ற, போற்றப்படுகின்ற இயற்கையன்னை ஈழத்திற்கீந்த எழில் மிகு திருகோணமலைத் துறைமுகத்தின் தென்மேற்கில் முத்துமிழ்ந்த கப்பல் துறையும் தம்பலாகாமக் குடாவும் சீனக் குடா வானூர்தி நிலையமும் வடக்கு எல்லையாக இருக்க சோழியன் ஓடையும் கந்தளாய்க் குளத்து நன்னீரால் வளம் பெறும் தம்பலாகமப் பற்றுக் களனி நிலமும் மேற்கைத் தழுவ வற்றாத வளநதியாய் வார்ந்தோடும் மகாவலி கங்கை தெற்கை அணைக்க பேரலையெழுந்து பெரிய கடல் உட்புகுந்த கொட்டியாரக் குடா (தோனா) கிழக்கை நனைக்க ஊடறுத்துப் பாயும் உப்பு நீர் ஆறுகளால் பல தீவுகளாகவும், தீபகற்பங்களாகவும் பிரிந்து கிண்ணிகளோ என எண்ணத் தோன்றும் வனப்பு மிகு ஒரு கழிமுகப் பிரதேசமே கிண்ணியா.

மீனினமும் மீனவரும் சந்திக்கின்ற நெய்தலும், பசுக்களும், எருமைகளும் உம்மா என்றழைக்கும் போது நெஞ்சுருகி பால் வடிக்கும் ஹமி. அங்கே பாலும், தெளிதேனும், செந்நெல்லும் பகிர்ந்தளிக்கும் முல்லையும் மருதமும் சேர்ந்த காட்டுவளமும் நிலவளமும் நீர்வளமும் நிறையப் பெற்ற ஹமி கிண்ணியா. விருந்தோம்பி ஈர்ந்துவர்க்கும் இனியோரையும் புரவலரையும், பாவலரையும் நாகாத்த நல்லோரையும் அரசியலிலே ஆளுமை களையும் கட்டுக்கடங்கா காட்டுயானைகளையும் பாங்காகப் பழக்கிய பாகர்களையும் சீனடி, சிலம்படி விந்தைகளில் வித்துவான்களான அண்ணாவி மார்களையும் வரமாக, வளமாகப் பெற்ற வீரத்தின் விளைநிலம் கிண்ணியா.

கிண்ணியா 81 பாகை 50 கலை கிழக்கு நெடுங் கோட்டினாலும் 8 பாகை 8 கலை அகலக் கோட்டி னாலும் இலங்கையின் கிழக்குக் கரையோர உலர் வலயத்தில் அமைந்துள்ளது. இதன் மழை வீழ்ச்சி, தரைத்தோற்றம், இயற்கைத் தாவரங்கள் என்பன இப்;பிரதேச அமைப்பை ஒத்தன. வடகிழக்குப் பருவக் காற்று, மேற்காவுகை, சூறாவளி என்பன மூலம் வருடாந்தம் 1270 மி.மீ முதல் 1900 மி. மீற்றருக்கிடையில் மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது.

கிண்ணியாவின் இயற்கை அமைவிடம் காரணமாக இது பல்வேறு இயற்கை அனர்த்தங்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. வெள்ளப் பெருக்கு, சூறாவளி, சுனாமி, நிலநடுக்கம் என்பன இவற்றுள் முக்கியமானவைகளாகும். எமது முன்னோர்கள் கிண்ணியாவில் 'நஞ்சு' வெள்ளம் வந்து தாவரங்களையும், பயிர்களையும் கருகச் செய்து விட்டதனால் நஞ்சு வெள்ளம் எனப் பெயரிட்டுள்ளனர். உண்மையில் 1883 ஆம் ஆண்டு திருகோணமலை முதல் கொழும்பு வரை தாக்கிய சுனாமி அலையையே நஞ்சு வெள்ளம் என எம் முன்னோர் குறிப்பிட்டுள்ளனர். 1957 ஆம் ஆண்டு பெருவெள்ளம், 1964 ஆம் ஆண்டு புயல், 1985ஆம் ஆண்டு கந்தளாய்க்குள உடைப்பு 2000 ஆம் ஆண்டு புயல், 2004 ஆம் ஆண்டு சுனாமி, 2011 ஆம் ஆண்டு வெள்ளம், 1973, 2012 ஆம் ஆண்டுகளின் நிலநடுக்கங்களையும் குறிப்பிடலாம்.

நிலப்பரப்பு

கிண்ணியாவின் மிகக் கூடிய நீளம் வடக்குத் தெற்காக 24Km, மிகக் கூடிய அகலம் கிழக்கு மேற்காக 16 Km. கிண்ணியாவின் நிலப்பரப்பு ஆறுகளால் பிரிக்கப்பட்டிருக்கின்றது. உப்பாறு, கங்கை, றப்பர்த்தோட்டம், சோழவெட்டுவான், சுடலைப்பெட்டி, பனிச்சையடித்தீவு, மைலப்பன்சேனை, தளவாய், கண்டற்காடு, காரவெட்டுவான், நாணற்புல் மேடை, சின்னத்தளவாய், மணலாறு, மடம், புல்வெட்டை, சின்னவெளி, பெரியவெளி, படுகாடு, பொன்னாங் கேணி, கற்சுனை, இறவடிச்சேனை, சாவாறு, உப்புச் சாவாறு, சாந்தாப்பனிக்கன், சில்கோடு, வெட்டை, மாவுலிங்கக்காடு, உயிரங்குளம், கொய்யாம்புலி, சொண்டாங்குளம் ஆகிய பிரதேசங்கள் யாவும் மகாவலி கங்கைக்கும் உப்பாறு (உப்புச் சாவாறு) க்கும் இடைப்பட்ட பிரதேசங்களாகும்.

நெற்சேனை, ஊற்றுக் குடா, தீனேரி, சின்னக்கிரான், பெரிய கிரான், மதுரங்குழி, கல்லம்பத்தை, குரங்கு பாஞ்சான், கல்லரப்பு, சுண்டியாறு, வாழைமாடு, வட்டமடு, பனிச்சங்குளம், வானாறு, பக்கிரான் வெட்டை, அயிலயடி, புலியடிக்குடா, மணிஅரசன் குளம், இத்திக்குளம், சுங்கான் குழி, பட்டியனூற்று, நடுஊற்று, கற்குழி, வேப்பந்தவனை, வன்னியனார் மடு, காளிபாய்ஞ்சான், சூரங்கல், குட்டியாக்குளம், புதுக்குடியிருப்பு, மாகாமம், கச்சக்கொடித் தீவு, கொல்லன் குளம், தேன்உடைந்த பட்டி, கல்லடி வெட்டுவான், ஆகியன கிண்ணியாவின் பெருத்த நிலப்பகுதியாகும். வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது இப்பிரதேசங்கள் யாவும் ஆரியரின் இரண்டாம் கட்ட குடியேற்றப் பிரதேசங்களாகும். தென்னிந்தியாவிலிருந்து படை யெடுத்த மாகனின் அடக்குமுறை காரணமாகவும், நுளம்புத் தொல்லை காரணமாகவும் இப்பிரதேசங் களைக் கைவிட்டுச் சென்றனர். சிறுகுளங்களும், அவர்கள் பாவித்த பாத்திரங்களின் எச்சங்களும் சான்று பகர்கின்றன. எமது முன்னோரின் அடிப்படைத் தொழில்களான விவசாயமும் மந்தை வளர்ப்புமாக இருந்ததனால் அவர்கள் இத்தேவைகளுக்காக கிண்ணியாவின் எல்லையை மகாவலி எல்லை வரை விஸ்தரிக்க முடிந்தது. இதற்காக நாம் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். இப்பொழுது அரசின் கழுகுப் பார்வைக்கு உட்பட்டிருப்பதனால் அரசியல்வாதிகளும், சிவில் சமூகமும் ஆக்க பூர்வமான செயல்களில் இறங்காவிட்டால் நம் எதிர்காலச் சமூகம் கிண்ணியா நகர் எனும் தொட்டிலுக்குள் தூங்கவேண்டியேற்படும்.

கிண்ணியாவின் அடுத்த கட்ட நிலப்பரப்பு சின்னக் கிண்ணியா, பெரிய கிண்ணியா, குறிஞ்சாக்கேணி, காக்காமுனை என்னும் சிறிய நிலப்பரப்புக்களாக விளங்குகின்றன. இவைகள் இயற்கையின் சீற்றத் தினால் உருவான செயற்கை நிலத் துண்டுகளாகும்.

இதுவரை குறிப்பிட்ட நிலப்பிரதேசங்கள் யாவும் கிண்ணியாப் பிரதேச செயலக எல்லைக்குள் 31 கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரதேசங்களின் மொத்தப்பரப்பு 146 சதுர கிலோ மீற்றர்களாகும். ஆனால் நில அளவைப் பிரிவினரின் தகவலின் படி கிண்ணியாவின் பரப்பு 152 சதுர கிலோமீற்றர்களாகும்.


கிராம சேவகர் பிரிவு - ச.பரப்பு (Km)

01 றஹ்மானிய நகர் - 0.126
02 சின்னக் கிண்ணியா - 0.128
03 கட்டையாறு - 0.108
04 மாஞ்சோலை - 0.504
05 மாஞ்சோலைச்சேனை - 0.630
06 மஹ்ரூப் நகர் - 0.225
07 அண்ணல் நகர் - 0.256
08 பைசல் நகர் - 2.205
09 பூவரசன் தீவு - 5.109
10 சமாவச்ச தீவு - 2.736
11 ஆலங்கேணி - 0.625
12 உப்பாறு - 36.008
13 ஈச்சந் தீவு - 0.945
14 பெரியாற்றுமுனை - 0.379
15 எக்தார் நகர் - 0.172
16 பெரிய கிண்ணியா - 0.098
17 மாலிந்துறை - 0.168
18 கிண்ணியா - 0.104
19 குட்டிகராச் - 0.234
20 இடிமன் - 0.521
21 குறிஞ்சாக்கோணி - 1.424
22 நடுத்தீவு - 2.502
23 முனைச்சேனை - 2.026
24 கச்சகொடித்தீவு - 1.426
25 காக்காமுனை - 3.920
26 மஹரூப் கிராமம் - 4.264
27 நடு ஊற்று - 6.872
28 சூரன்கல் - 13.789
29 மஜீத் நகர் - 30.784
30 மணியரசன் குளம் - 11.146
31 ஆயிலியடி - 17.433

மொத்தப் பரப்பு - 146.900 ச.கிமீ

தகவல்:- பிரதேச செயலகம் கிண்ணியா

 

Share
comments

Comments   

 
0 #1 faseeth 2014-09-16 18:45
[google][/google]
Quote | Report to administrator
 
 
0 #2 faseeth 2014-09-16 18:46
hdashvagyasj
Quote | Report to administrator
 
 
0 #3 JosephGer 2018-03-12 21:33
You explained that very well.

what is cialis tab 20mg cialis generic cena cialis v lekarni generic cialis: http://cialisfidel.com/
Quote | Report to administrator
 
 
0 #4 JosephGer 2018-03-13 15:07
Awesome content. Appreciate it.

optimal dose of cialis buy cialis online testosterone booster and cialis cialis generic: http://cialisfidel.com/
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

கிண்ணியா

Prev Next

கிண்ணியாவின் முதல்வர்கள் -30; முதல் முது கல்விமாணி ஏ.எஸ்.மஹ்ரூப்

கிண்ணியாவின் முதல்வர்கள் -30; முதல் முது கல்விமாணி ஏ.எஸ்.மஹ்ரூப்

கிண்ணியாவின் முதலாவது முதுகல்விமானி ஏ.எஸ்.மஹ்ரூப் அவர்களாவர். இவர் அப்துல் ஸமது –மர்ஹூமா உம்மு குல்தூன் ஆகியோரின் புதல்வராக 1958.06.16 இல் கிண்ணியா ...

03 மே 2017 Hits:5134

Read more

கிண்ணியாவின் முதல்வர்கள் - 29 முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்

கிண்ணியாவின் முதல்வர்கள் - 29 முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்

  கிண்ணியாவின் முதல் ஆசிரியை திருமதி றைஹானத்தும்மா அப்துல் ஸலாம் அவர்களாவர். இவர் 1950.03.05 இல் மர்ஹூம்களான செய்னா மரக்காயர் சேகப்துல்லாஹ் - கா...

25 ஒக் 2016 Hits:9241

Read more

கிண்ணியாவின் முதல்வர்கள் - 28 முதல் சட்டமாணி ஜனாப்.ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார்

கிண்ணியாவின் முதல்வர்கள் - 28 முதல் சட்டமாணி ஜனாப்.ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார்

கிண்ணியாவின் முதல் சட்டமாணி (LLB) ஜனாப். ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார் அவர்களாவார். இவர் மர்ஹூம் அப்துல் வாஹிது – ஹைருன்னிஸா தம்பதிகளின் புதல்வராக 1957.04.25ஆ...

27 செப் 2016 Hits:8507

Read more
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17967
மொத்த பார்வைகள்...2074891

Currently are 219 guests online


Kinniya.NET